Load Image
dinamalar telegram
Advertisement

கடலில் வருது கருணாநிதி பேனா: அனுமதி தந்தது மத்திய அரசு

Tamil News
ADVERTISEMENT

சென்னை: மெரீனா கடற்கரையில் கருணாநிதி நினைவுச்சின்னம் அருகே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்தின் பின்புறம் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதற்காக 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நினைவிடம் அமைக்கும் திட்டத்துக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் கோரப்பட்டது. மாவட்ட அளவிலான இந்த ஆணையம், இதற்கு சில நிபந்தனைகள் விதித்து, மாநில ஆணையத்துக்கு அனுப்பியது. மாநில ஆணையத்தில் ஜனவரியில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

நினைவிடம் அமையும் இடத்தில் இருந்து, 650 மீட்டர் தொலைவில் கடலில், 137 அடி உயரத்துக்கு கருணாநிதி நினைவாக, ரூ.81 கோடி செலவில் 'பேனா' நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

Latest Tamil News
இந்த நிலையில், பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை துவங்கியது. ரூ.81 கோடி மதிப்பில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித் துறை பெற்றுள்ளது. தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறும் முயற்சியில் பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது.

Latest Tamil News
இதன்படி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியது.


இதனையடுத்து பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை அளித்துள்ளது. பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியை துவங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பேனா நினைவுச்சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாகவும் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து (97)

 • katharika viyabari - coimbatore,இந்தியா

  அடுத்த சிலை கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு அருகில் வைங்கப்பா. ரயில் வண்டியும் மஞ்சப்பையும் ஒரு சிலையாய் செஞ்சி வைங்கப்பா.

 • theruvasagan -

  வைக்கப் போற எடத்தை மாத்தணும். கூவம் முகத்துவாரத்துல வச்சா பொருத்தமா இருக்கும். சாக்கடையை சந்தனமா மணக்க வைப்போம்னு பல கோடிகளை மாயமாக்குனத்துக்கு ஞாபகார்த்தமா அந்த நாறுமணமான சூழலில் வைப்பதுதான் அன்னார் நினைவுக்கு சாலப் பொருத்தம்.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  அம்பேத்கர் அண்ட் கம்பெனி காப்பி பேஸ்ட் செய்து உண்டாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தில் இது மாதிரி பாதகங்களுக்கு வரவேற்பு இருக்கலாம். ஆனால் தர்ம சாத்திரங்கள் இவற்றை ஏற்பதில்லை. தண்டனை உண்டு. பொது மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை அவர்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே அரசு செலவிட முடியும். இல்லாவிட்டால் கிருமி போஜனம் தான்.

 • K Ravichandran - chennai,இந்தியா

  தேவையற்றது , வீண் பண விரயம். வீட்டு வரி , மின்சார வரியை குறைக்கலாம். ஸ்டிக்கர் தீ மு க.

 • theruvasagan -

  சில குறுமதியாளார்கள் ஒரு பேனாவுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று கேட்கிறார்கள். அது என்ன சாமானியபட்ட பேனாவா. தமிழை எழுதினது மட்டுமில்லை. இந்த தமிழ் மண்ணையே உழுத பேனா. அந்த வகையில் அதனுடைய உழைப்பில் உதித்த அற்புத படைப்புகள் எத்தனை எத்தனை தெரியுமா. அது மட்டுமா. எக்காலத்திலும் வற்றாத அதிசய ஊற்று அது. அதை நினைவூட்டத்தான் வற்றாத கடலில் நிலைநாட்டப்பட உள்ளது. ஏகடியம் பேச வேண்டாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்