Load Image
Advertisement

மின் கட்டணம் உயர்வில் உயிருள்ளவர்கள் மட்டுமின்றி இறந்தவர்களும் தப்ப முடியாது!

Tamil News
ADVERTISEMENT
சென்னை : மின் மயானம் மற்றும் கல்லறை தோட்டங்களுக்கு மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த, மின் கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் சுமையில் இருந்து உயிருள்ளவர்கள் மட்டுமின்றி, இறந்தவர்களும் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழக மின் வாரியம், மின் பயன்பாட்டை பொறுத்து தாழ்வழுத்தம், உயரழுத்தம் ஆகிய பிரிவுகளில் மின் இணைப்பு வழங்குகிறது. அதன்படி, 150 கிலோ வாட் கீழ் வரை தாழ்வழுத்தம்; அதற்கு மேல் உயரழுத்த பிரிவு.உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, மின் மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


* உயரழுத்த பிரிவில் இடம்பெறும், 'எலக்ட்ரிக் கிரிமடோரியம்' எனப்படும் மின் மயானங்களுக்கான மின் கட்டணம் 1 யூனிட், 6.35 ரூபாயாகவும்; 'டிமாண்ட் சார்ஜ்' 1 கிலோ வாட்டிற்கு மாதம், 350 ரூபாயாகவும் இருந்தது


* தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும், உடல் தகனம் செய்யும் மின் மயானங்களுக்கான மின் கட்டணம் வீட்டு பிரிவில் வசூலிக்கப்பட்டது. இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் வரை மானிய விலை மின் கட்டணம் ஆகிய சலுகைகள் கிடைத்தன. அதற்கு மேல் சென்றால் யூனிட்டிற்கு, 6.60 ரூபாய் கட்டணம்வசூலிக்கப்பட்டது


* மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இம்மாதம், 10ம்தேதி முதல் மின் கட்டணங்களை உயர்த்தி புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயரழுத்த பிரிவில் இடம்பெறும் மின் மயானங்கள், உடல் அடக்கம் செய்யப்படும் இடங்களுகளுக்கு மின் கட்டணம் யூனிட்டிற்கு, 7 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ் கிலோ வாட்டிற்கு மாதம் 550 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Latest Tamil News


* தாழ்வழுத்த பிரிவில், மின் மயானங்களுக்கான மின் கட்டணம், வீட்டு பிரிவில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான விகிதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 யூனிட்டிற்கு 8 ரூபாயாகவும்; நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு மாதம் 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


இதனால் மின் மயானங்களை பராமரித்து வருவோர், மின் கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க, உடல் தகனம் செய்ய வரும் உறவினர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பர்.எனவே, உயிரிழந்தவர் கூட, மின் கட்டண உயர்வில் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (23)

  • Yokiyan - Madurai,இந்தியா

    இப்போல்லாம் எல்லைல ராணுவவீரர்கள் இல்லையப்பா?

  • ஆரூர் ரங் -

    நல்லதுதானே செய்திருக்கின்றனர்?🤔 மயானத்தில் மின் கட்டணத்தைக் கேட்டவுடன் ஷாக் அடித்து பிணமே எழுந்து ஓடினாலும் ஆச்சர்யமில்லை . சந்தோஷம்தானே? ஆக ஆக.ஆக😉🙃.. இது மாண்டவர்களையும் மீள வைக்கும் விடியல் அரசு.

  • ஆரூர் ரங் -

    இனி பலர் வேறு வழியின்றி .

  • மைதிலி -

    மாடல் அரசின் மகத்துவம்

  • Shekar - Mumbai,இந்தியா

    மகாராஷ்டிரா எவ்வளவோ மேல், ஒருவர் இறந்துவிட்டார் என்று நகராட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்திவிட்டால் எடுக்கும் நேரம் கேட்டு சரியாக வண்டி அனுப்பும் மயானத்தில் ஒரு பைசா செலவு கிடையாது. விறகு காலத்தில் விறகு கூட நகராட்சி ஏற்பாடு செய்துவிடும் ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்தால்தான் அவர்கள் கேட்கக்கூடமாட்டார்கள். இங்கு இறந்தவர்களை தெய்வம் போல் மதித்து மரியாதை செய்வர். ஆட்டம் பாட்டம் ரோட்டை மறித்தல் போன்ற மோசமான செயல்களும் இல்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement