Load Image
Advertisement

தி.மு.க., வின் அடுத்த நாடகம்: அண்ணாமலை கண்டனம்

சென்னை-'தி.மு.க., அரசு வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, இந்தியா, ஹிந்தியா என்று அடுத்த நாடகத்தை துவக்குகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் மிகுந்த நலிந்த நிலையில் இருந்தும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறி போயின.

Latest Tamil News

ஒப்புதல்இதை பிரதமர் கவனத்திற்கு எடுத்து சென்று, அந்த சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யும் நடவடிக்கைகள், தமிழக பா.ஜ.,வால் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அமைச்சரவை, மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

திராவிட 'ஸ்டிக்கர்'மத்திய அரசு செய்த சாதனைக்கு வழக்கம்போல், தி.மு.க., திராவிட 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வால் மக்கள் அவதிப்படும்போது, தி.மு.க., அரசு கொஞ்சமும் கவலைப்படாமல், அடுத்தவர் சாதனைக்கு தங்கள் 'அட்ரசை' ஒட்டுவது தான் திராவிட மாடலா? தங்களால் எதுவுமே உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால், அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுகிறதா?மொழியில் அரசியல், கல்வியில் அரசியல், ஜாதியில் அரசியல், மதத்தில் அரசியல், பிரிவினைவாத அரசியல் என, மக்களை தொடர் பதற்றத்தில் வைத்திருக்கிறது தி.மு.க., அரசு. வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தமிழக கனிமங்களை எல்லாம் கமிஷனுக்காக கொள்ளை போக அனுமதித்து விட்டு, 'இந்தியா, ஹிந்தியா' என்று அடுத்த நாடகத்தை துவங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Tamil News

'அஞ்சுபவர் அல்ல'அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வேலுார் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' ஊழலை கண்டித்து நடந்த மாபெரும் போராட்டத்தில், பா.ஜ., மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை கைது செய்துள்ளது, திறனற்ற தி.மு.க., அரசு.சுதந்திர போராட்ட வேலுார் சிப்பாய் கலகத்தை போல், ஊழலின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்க, பா.ஜ., வேலுாரில் நடத்திய போராட்டம் விதையாக இருக்கும்.அடக்குமுறைக்கு அஞ்சுபவர்கள் பா.ஜ., தொண்டர்கள் அல்ல என்பதை, தி.மு.க., அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (33)

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  அப்படியே ஜி சொன்ன 15 லச்சம் அந்த கருப்பு பணம்

 • மதுமிதா -

  இப்போது தானே குடும்ப கோயிலின் மூலம் சீரியல் தொடங்கி உள்ளார் வியாபார நோக்கிற்காக பள்ளியில் ஹிந்தி நாடகம் மதிப்பிற்குரிய திரு ஜனாதிபதி அவர்களை (பழங்குடி) பெண்மணியை கௌரவித்தோம் அல்லவா அதனால் மாடல் முதல்வர் நரிக்குறவர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தந்து விளம்பர நாடகம் எங்கே இந்தியா இந்துஸ்தானிஆகிவிடுமோஎன்ற பயம் அதனால் தான்ஹிந்தியா வா என்ற நகைச்சுவை நாடகம் கவலை கலை எல்லாம் சார்

 • தமிழ் -

  இந்தியாவின் வளர்ச்சி என்பது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஏற்பட்டது. ஆனால் அதை பிஜேபி மட்டுமே செய்ததுபோல் பில்டப் கொடுக்கிறீர்களே அதுமட்டும் சரியா.

 • Mohan - COIMBATORE,இந்தியா

  அப்டியா ..

 • அருண்குமார், சென்னை - ,

  தீய மு க என்பதே நாடக கம்பெனி தானே அவர்கள் எப்பொழுது உண்மை பேசி இருக்கிறார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்