சென்னை: வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதில் 22 பேரை கடந்த 21 நவம்பர் 2020 அன்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக் கட்டத்தில் இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா (எ) கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ) அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 19ம் அறிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட மாரி, பாஷா, முத்துபாண்டி மற்றும் மீனா ஆகியோர் தலைமறைவாகி விட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கபடும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (9)
Scotland yard na summava?
பப்ளிக்கா தூக்கு தண்டனை தரவேண்டும் அனிஸ்தீஷியா இல்லாமல் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் ஜெ அவர்கள் சட்ட சபையில் கூறினார் அப்போது தான் பாலியல் வக்ரபுத்தி காரர்களுக்கு பயம் வரும்
சட்டங்களை உடைத்து வெளியே வந்துருவாங்க. இன்னும்.ஒரு 20 வருஷத்துக்கு நீதிமன்றங்கள் வாய்தா வழங்குனா எல்லோரும் அமைதியாக இயற்கையா செத்துப் போயிருவாங்க. இல்லேன்னா இருக்கவே இருக்கு கருணை மனு, புண்ணாக்கு விஷயமெல்லாம். அதையும் முறி ஜெயில்ல போட்டா அண்ணா பிறந்தநாளில் கிரிமினல்களை விடுதலை செஞ்சுரலாம். எல்லாத்துக்கும் நம்ம கிட்டே ஆள் இருக்கு.
இதில் ஈடுப்பட்ட அனைவரையும் தூக்கிலிடவேண்டும், மிருகத்திற்கும் கேவலமானவர்கள். சந்தியில் கட்டி வைத்து போறவரவர்களை வைத்து காறி துப்ப வைக்கவேண்டும். இவர்கள் எல்லாம் திருந்த மாட்டார்கள். ஒரே வழி தூக்குதான்
நீதி அரசர்கள் தயவு செயது மிக கடுமையான தண்டனைகள் வழங்கணும், சும்மா பக்கத்துக்கு ஊருக்கு மாற்றலோ, அரசு ஊழியர் என்பதற்காக வெறும் கவுன்சிலிங் என்று விட்டுவிடாதிர்கள்