Load Image
dinamalar telegram
Advertisement

”ஆறு நாட்களில் 1 லட்சம் பேருக்கு வேலை” :ராஜஸ்தான் அரசு அசத்தல்

Tamil News
ADVERTISEMENT



இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஆறு நாட்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்.,அரசு அமைந்துள்ளது. கடந்த செப்.9ம் தேதி, மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை போன்று, இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தினை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.


நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல், பேனர்கள் அகற்றுதல் போன்ற பணிகள் வழங்கப்படுகிறது. Latest Tamil News 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். இதில் பயிற்சி இல்லாத தொழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூ.259, திறன்வாய்ந்த தொழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூ.283 கூலியாக வழங்கப்படுகிறது. மேலும், நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு, குறிப்பிட்ட இடைவெளியில் சம்பளம் செலுத்தப்படும். இதற்காக ராஜஸ்தான் அரசு, பட்ஜெட்டில் ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் உள்ளாட்சி நிர்வாக துறை செயலர் ஜோகரம் கூறியதாவது :

'இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2.45 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 3,843,639 பேருக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 96,452 குடும்பங்களை சேர்ந்த 1,39,798 பேர் வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டம் குறித்து நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் உடனடியாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது.'

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • அப்புசாமி -

    எங்க ஊரில்வீடு வீடா காய்கறி விக்கும்.கெழவி கொஞ்சனாளா காணோம். பதறிப் போய் விசாரிச்சா 100 நாள் வேலை திட்டத்துக்கு போயிருக்காம்.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இதில் யார் யாருக்கு எவ்வளவு கமிசன் என்று சொல்ல வில்லையே? இதே அசோக் கெலோட் தான் தற்போதைய காங்கிரஸின் கற்பகத்தரு என்று செய்திகள் சொல்கின்றன. எங்கேயோ இடிக்க வில்லை? மத்திய அரசின் நூறுநாள் வேலை திட்டத்தை மடை மாற்றுகிறாரோ?

  • mahalingamssva -

    இது என்னமோ எனக்கு சரியாபடல.இதை நம்பி பார்த்துக் கொண்டிருக்கும் தற்போதய வேலையை விட்டு விட்டுவரவேண்டும்.சரி 100 நாள் தான் அதுவும் மிகக் குறைவாகவே ஊதியம். மீதி 265 நாட்கள்?இதுவும் வேறு ஒருவர் தற்போது பார்த்து வரும் வேலைதான்.அவர்கள் என்ன ஆவார்கள்

  • அப்புசாமி -

    சூப்பர். ராஜஸ்தான் மாடல். சீக்கிரமே எல்லோரும் தினம் 259 ரூவா சம்பளம் வாங்கி கோடீசுவரர்களாகி விடுவார்கள்.

  • jayvee - chennai,இந்தியா

    திறன்பெற்றவர்களுக்கு வெறும் 24 ருபாய் மட்டுமே அதிகம்.. இதிலிருந்தே தெரிகிறது இது இன்னோர் மோசடி என்று.. தேர்தல் சமயத்தில் கட்சி பணத்தை கொடுப்பதை தவிர்க்க, அரசு பணத்தை அள்ளிக்கொடுத்து வோட்டு வாங்க இந்த திராவிட மாடல் வேலை வாய்ப்பு திட்டம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement