ADVERTISEMENT
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஊராட்சி குமராமங்கலம் கூட்டு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி,47. இவர் பிளாஸ்டிக் கதவு ஜன்னல்கள் செய்யும் கடை வைத்துள்ளார்.
இவருக்கு அனுராதா (40) என்ற மனைவியும், ஜெய் ஸ்ரீ (18), வர்ஷா (11) என இரு மகள்களும் உள்ளனர். இருவரும் ஆம்பூர் கோவிந்தபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷ் பள்ளியில் படித்து வந்தனர். தினசரி பள்ளி வாகனத்தில் சென்று வந்த இவர்கள், இன்று (செப்.,15) வாகனத்தை தவறவிட்டுள்ளனர். இதனையடுத்து தண்டபாணி, தனது பைக் மூலம் இரு மகள்களையும் அழைத்து பள்ளி சென்றுக் கொண்டிருந்தார்.
ஆம்பூர் ஓ.ஏ.ஆர்.தியேட்டர் சிக்னல் அருகே வந்தபோது, ஓசூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கனரக லாரி ஒன்று தடுப்புகளை இடித்து தாறுமாறாக வந்துள்ளது. இந்த லாரி தண்டபாணியின் பைக் மீது மோதியது. இதில் லாரியின் இடையே சிக்கிய தண்டபாணி படுகாயம் அடைந்தார். பைக் பின்புறம் அமர்ந்து சென்ற அக்கா, தங்கைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிய போது பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பள்ளி செல்கையில் விபத்தில் சிக்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
லாரி ஓட்டுனரை காலி பண்ணி இருக்கணும்.