Load Image
Advertisement

பழைய பயணியர் பெட்டிகள் சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றம்

சென்னை-வாகனங்களை ஏற்றி செல்லும் வகையில், 200 பழைய பயணியர் பெட்டிகளை, சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றும் பணியை, தெற்கு ரயில்வே துவங்கிஉள்ளது.
Latest Tamil News


தெற்கு ரயில்வேயில் கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, பல்வேறு புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.குறிப்பாக, கூடுதல் சரக்குகளை கையாளுவது, 'பார்சல்' ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில், ஆண்டுதோறும் சராசரியாக 20 சதவீதம் வரை வருவாய் அதிகரித்து வருகிறது.


கடந்த சில மாதங்களாக, சரக்கு ரயில்கள் வாயிலாக, பல்வேறு வகை வாகனங்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், கூடுதலாக சரக்கு ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளை, தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள்கூறியதாவது: சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில்வே 'கேரேஜில்' பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.

Latest Tamil News
இது தவிர, பழைய பயணியர் பெட்டிகளை தேர்வு செய்து, அவற்றை சரக்கு மற்றும் 'பார்சல்' ரயில்களுக்கான பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில் வாகனங்கள் கையாளுவது அதிகரித்து வருகிறது. இதற்காக சரக்கு பெட்டிகள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, மொத்தம் 200 பயணியர் பெட்டிகளை தேர்வு செய்து, அவற்றை இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் வகையில், சரக்கு பெட்டிகளாக வடிவமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள், இந்த பணிகளை முடிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (14)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Vayasaanavangaluku salugaikal kodukamaattenenkiraargale

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    சரக்கு வாகனங்களை ரயில்களில் கொண்டு சென்றால் டோல் கேட் கட்டணங்களை தவிர்க்கலாம் .

  • R.Balasubramanian - Chennai,இந்தியா

    மோசமான பயண பெட்டிகளுக்கு காரணம் நமது பொது மக்களே. பொது சொத்துக்களை நமது சொத்து போல பாதுகாக்க வேண்டும். மக்களிடம் இன்னும் AWARENESS வரவே இல்லை. எத்தனை முறை பழுது பார்ப்பது. ....

  • Rajan -

    துருபிடித்த பெட்டிகளை ஓட்டுகிறார்கள்.

  • Rajan -

    முதலில் Chennai யிலிந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி ஏயில் பெட்டிகளை மாற்றுங்க.. அரத பழசு துருப்பிடித்த பெட்டிகள்.. கேவலமாக உள்ளன.. டாய்லெட் படு மோசம்.. உடைந்து போன குழாய்கள்.. FLUSH பண்ண முடியாத இறுக்கமான அழுத்தான்கள்... உடைந்த ஜன்னல்.. எதோ போனால் போகிறது என்று காயலான் கடையில் போட வேண்டிய பெட்டிகளை இணைத்துள்ளனர். நான் என்னவோ ஊட்டி TRAIN என்றால் பிரமாதமாக இருக்கும் என்று நினைத்து வந்தால் ஒரு உருப்படாத கோச்சை பார்த்து ஏமாந்து விட்டேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up