ADVERTISEMENT
புதுடில்லி: வரும் செப்.,17 முதல் 19 வரை நடைபெற உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ஸ்காட்லாந்திலிருந்து லண்டன் கொண்டு வரப்பட்ட ராணியின் உடல், பகிங்ஹாம் அரண்மனை வந்தது. அங்கு இரு நாட்கள் வரை ராணியின் உடல் வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இறுதி சடங்கு நடக்கும் தினம் வரை, ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி ராணியின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில், அரச குடும்பத்து உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் என 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். செப்.,17 முதல் 19ம் தேதி வரை நடைபெறும் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிகழ்வுக்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
வெளியுறவு அமைச்சர் சென்றாலே போதும்.
அடிமைத்தனத்தின் நீட்சி.
நம்ம ஜப்பான் துணை முதல்வருக்கு அழைப்பு இல்லையா?
முக்கிய கடமைகளை ஆற்றத் துவங்கி விட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இந்தியாவை அடக்கி ஆண்ட அந்நிய சக்திகளின் அடையாளங்களில் எலிசபெத் ராணியும்.ஒருவர். அழிச்சிட்டோம். சாரி அவரே போயிட்டாரு.