மதுரை: குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்களை பாடவும், ஆபாச நடனம் ஆடவும் இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இன்று(செப்.,14) உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு
இது குறித்து, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இன்று(செப்.,14) பிறப்பித்துள்ள உத்தரவு:
*குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்களை பாடவும், ஆடவும் இடைக்கால தடை விதித்துள்ளது.
*தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.., திருவிழா துவங்குவது முதல் முடியும் வரை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்.
*பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப்படவில்லை என்பதை மாவட்ட கலெக்டரும் உறுதி செய்ய வேண்டும்.
*கோவில் விழாக்களில், கலைநிகழ்ச்சிகள் எனும் பெயரில் ஆபாச நடனங்கள் ஆடுவதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (11)
""//தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.., திருவிழா துவங்குவது முதல் முடியும் வரை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்"// செத்தாண்டா சேகரு ... 😂
மானாட மயிலாட பார்க்கவில்லை போலும்
புராண நாடகங்களை மட்டும் அனுமதிக்கலாம் ..சிறிய பிள்ளைகள் இளைஞர்கள் போன்றவர்கள் அந்த புராணங்களை அறிந்து கொள்ள நல்ல வழி வகுக்கும்
தொலைக்காட்சி கல்விசாலைகள் எல்லாவற்றுக்கும், தடை போட வேண்டும்
கோவில்களில் இந்த ரெகார்ட் டான்ஸ் வந்தது எல்லாம் இந்த கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின்தான் நடக்கிறது. அந்தக்காலத்தில் கர்நாடக சங்கீத கச்சேரி இருக்கும், அதனுடன் இதிகாச புராணங்களில் இருந்து நல்ல கதைகளை சொல்லும் ஹரிகதா காலஷேபம் இருக்கும், அல்லது கர்ணன், விபீஷணன் போன்ற இதிகாச பாத்திரங்களை கதையாக சொல்வார்கள். தற்போது எல்லாம் மாறி விட்டது. இதனாலேயே இளம் சிறார்களுக்கு கூட வன்முறையிலும், குற்ற செயல்களிலும் நாட்டம் போகிறது. மேலும் அந்தக்காலத்தில் டாஸ்மாக் இல்லை. குடித்தவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அவர்களுக்கு சமூகத்தில் எந்த ஒரு அந்தஸ்தும் கிடையாது. இன்று எல்லாமே மாறிவிட்டதே.