புதுடில்லி -- வாரணாசி, புதுடில்லி -- வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வரும் 'வந்தே பாரத்' ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:சிறிய தொழில்நுட்ப மாற்றங்களோடு தயாரிக்கப்பட்ட மூன்றாவது வந்தே பாரத் ரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நிறைவு செய்துள்ளது.அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க, ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கிடையே, ஐ.சி.எப்., ஆலையில் நான்காவது வந்தே பாரத் தயாரிப்பு பணியில், தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இந்த மாதம் இறுதிக்குள், இந்த ரயில் தயாரிப்பு பணி முடிந்து விடும். இந்த ரயிலை எந்த தடத்தில் இயக்குவது என்பது குறித்து, ரயில்வே வாரியம் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (11)
அதிக மக்கள் தொகை உள்ள நமது நாட்டில் இடை நில்லா பாயிண்ட் டூ பாயிண்ட் ரயில்களை விடுவது கடினம். 😙 அதே நேரத்தில் அதிக ஊர்களில் நிறுத்தி சென்றால் அதிக வேகத்தில் செல்லவே முடியாது. வைகை எக்ஸ்பிரஸ் துவக்கத்தில் மூன்றே ஊர்களில் நின்றது. அதனால் ஒரே நாளில் சென்னை சென்று திரும்பியது. அரசியல் அழுத்தங்கள் காரணமாக நிறுத்தங்கள் அதிகரித்து பயண நேரமும் கூடியது. எனவே சாதாரண பாதையில் 160 கிமி வேகத்துக்கு மேல சாத்தியம் மிகவும் குறைவு. புல்லட் ரயில் பெரு நகரங்களுக்கிடையே மட்டும் சாத்தியம்.
உலகமே 600 கிமீ வேகத்தில் செல்லும் ரயில் பாதைகளா மாற்றும் முயற்சியில் இருக்கிறப்ப நாம் இன்னமும் 180 கிமீ வேகம் செல்லும் ரயில் பற்றி சிலாகிச்சிக்கிட்டு இருக்கோம்... இதுல வேடிக்கை என்னன்னா இந்த ரயில்கள் கூட ஆவரேஜா மணிக்கு 80 கிமீ தூரத்தைத்தான் கடக்க முடியும்.. நம் தண்டவாள கட்டமைப்பு அப்பிடி... இதுல பெருமை பேசுறது 2 ஜி நெட்ஒர்க் மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும் ஊரில் குந்திகிட்டு என்கிட்டே லேட்டஸ்ட் 5 ஜி ஆப்பிள் போன் இருக்குன்னு பெருமைப்பட்டுக்கற மாதிரிதான்...
ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளில் தமிழகம் ஒதுக்கப்படுகிறது. பெரும் வருவாயை வரியாக தரும் தமிழகத்திற்கு மிகக்குறைவான வளர்ச்சி திட்டங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. தொடர்ந்து தமிழகம் ஒதுக்கப்படுமானால் அதற்கான விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.
நீங்க எத்தனை வந்தே பாரத் ரயில்கள் இங்கு ICF. இல் செய்தாலும் அணைத்தும் வடநாட்டில் தான் ஓட வைக்க போகிறார்கள். ஆனால் பேசும்போது மட்டும் தமிழ்நாடு ஹை, திருவள்ளுவர்ஹி, திர்குரல்ஹே, கோன் உயர்வான் ஹை என்று நம்மை ஏமாற்றுவார் இந்த ஹிந்தி கூட்டம் இந்த மொதல் வந்தே பாரத் ஒரு சில வருடங்கள் ஓடி அரதல் பழசான பிறகு தான் அதை ரீ கண்டிஷன் என்ற பெயரில் பட்டி பார்த்து ஓட்டை உடைசலா நம்ம ஊரில் கொண்டு வந்து ஓட வைப்பாங்க ஒரு விதத்தில் பார்த்தா திராவிடியாக்கள் சொல்லும் வடக்கு, தெற்கு பேதம் உண்மை தான் என்று தோன்றுகிறது.
வடநாட்டில் தான் ஓடும் . என்ன செய்ய இங்கே திருட்டு ரயிலில் பயணம் செய்வதுதான் தன்மான பகுத்தறிவு .....