மருத்துவ மாணவியருக்கு தொல்லை உதவி பேராசிரியர் வேறு துறை மாற்றம்
தர்மபுரி: மருத்துவக் கல்லுாரி மாணவியருக்கு தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர், வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லுாரியில் சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர் சதீஷ்குமார். இவர், பாடம் எடுக்கும்போது, மாணவியரின் தலையை தொடுவது, மேலே சாய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் அறிக்கையை, தர்மபுரி மருத்துவக்கல்லுாரி முதல்வர் அமுதவல்லியிடம் வழங்கினர். அவர், சதீஷ்குமாரை சட்டம் சார்ந்த துறையிலிருந்து, பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக விசாரித்து மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து மாணவியர் கொடுத்த புகார்படி, விசாரணை குழு அலுவலர்களான டாக்டர்கள் கண்மணி கார்த்திகேயன், தண்டர்சீப், காந்தி ஆகியோர் கடந்த, 6ல் சதீஷ்குமாரிடம் இதுகுறித்து விசாரித்தனர்.
இதன் அறிக்கையை, தர்மபுரி மருத்துவக்கல்லுாரி முதல்வர் அமுதவல்லியிடம் வழங்கினர். அவர், சதீஷ்குமாரை சட்டம் சார்ந்த துறையிலிருந்து, பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக விசாரித்து மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!