ADVERTISEMENT
மதுரை: பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடைவிதிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று (செப்.,12) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகை ப்படம் அதிர்ச்சியை தருகிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இல்லையெனில் மது விற்பனைக்கு தடைவிதிக்க நேரிடும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரிய வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
வாசகர் கருத்து (40)
யுவர் ஆனரோட சம்பளம், பேட்டா எல்லாம் டாஸ்மாக்கின் கொடைன்னு கேள்விப்பட்டிருக்கேன் யுவர் ஆனர்.
நாட்டிலேயே அதிக வாகன விபத்துகள் நடப்பது சென்னையில். காரணம்😇😇 வேறென்ன?சரக்குதான்.
மது உட்பத்திக்கு தடை விதித்து உத்தரவு இட்டால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும், கணம் கோர்ட்டார் அவர்களே...
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே மதுக்கடையை திறக்க வைத்து உத்தரவிட வேண்டும் . இதன் மூலம் குடிபோதை கலாச்சார பரவல் நோய் குறைய வாய்ப்புள்ளது . இரவில் விபத்துக்களும் குறையும் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Ban on liquor sales if done by High Court, it will be a welcome move from public welfare aspect. This leads to lot of non sense and issues in life of the drunkard and also on the public