Load Image
Advertisement

கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரும் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: ஈ.வெ.ரா சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் ஈ.வெ.ராமசாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Latest Tamil News
இந்த மனு இன்று (செப்.,12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா?' எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து (103)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    நியாயமான தீர்ப்பைப் பெற உச்சநீதிமன்றம்தான் செல்ல வேண்டுமா ?

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    நாத்திகத்துக்கு இருக்கும் உரிமை ஆத்திகத்துக்கும் உண்டு ........... ஜனநாயக நாடாக இருந்தால் ............

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    உச்ச கோர்ட் ஒரு உத்தரவு போடவேண்டும்.

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    ஐன்ஸ்டீனின் வாசகங்களை அவர் சிலைக்கு அடியில் எந்த சர்ச் முன்னாலும் வைக்கவில்லை . அவர் புத்தகத்தில் மட்டுமே உள்ளது . பெரியார் எழுதிய நூல்களை படிக்கவோ அதை தடை செய்யவோ கோரவில்லை கோவில் முன்னால் வைக்காதீர்கள் ( அப்படியே கோவில் முன்னால் வைக்கவேண்டுமெனில் மசூதி சர்ச் முன்னாலும் முதுகெலும்பு இருந்தால் வையுங்கள் பார்க்கலாம் ) என்று தான் கோரப்படுகிறது

  • M Ramachandran - Chennai,இந்தியா

    எங்கள் அரசு கடவுள் மறுப்பு கொள் கையில் (வெளியில் தான் வீட்டுக்குள் அல்ல ) நம்பிக்கையயை உள்ள அரசு என்று நீதி மன்றத்தில் ( முதுகெலும்பு இருக்கும் பட்சத்தில்) தெளிவு படுத்துவாரா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்