Load Image
Advertisement

அண்ணாமலை அனுப்பிய ரகசிய கடிதம்

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்களில், ஒரு ரகசிய கடிதம் பற்றி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதை எழுதியவர் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.இவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதியிருக்கும் இக்கடிதத்தில் உள்ள விபரங்கள் அமைச்சக அதிகாரிகளை பரபரப்பாக்கியுள்ளது.

Latest Tamil News

மூன்று பக்கங்களில் எழுதப்பட்ட இக்கடிதத்தில், தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழங்க என்ன காரணம் என்பதை விலாவாரியாக எழுதிஉள்ளாராம். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் போதைப் பொருள் எப்படி அதிகமாக வினியோகிக்கப்படுகிறது, குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே இவற்றின் புழக்கம் எப்படி அதிகமாக பரவியுள்ளது என்பதை இக்கடிதத்தில் அண்ணாமலை எழுதியுள்ளாராம்.இதைவிட ஒரு முக்கியமான விஷயத்தையும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.

Latest Tamil News
கடந்த ஒரு ஓராண்டில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் உறவினர்கள், எப்படி மறைமுகமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அவர் புள்ளி விபரங்களுடன் எழுதியுள்ளாராம். இந்த விபரங்கள், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்கின்றனர், உள்துறை அமைச்சக அதிகாரிகள். விரைவில் என்.ஐ.ஏ., தமிழக போதைப் பொருள் விவகாரத்தை விசாரிக்கும் என சொல்லப்படுகிறது.


வாசகர் கருத்து (56)

  • TRUBOAT - Chennai,இந்தியா

    அடிமைகளை கண்காணித்துக்கொண்டு அவர்கள் மேலே வராமல் பார்த்துக்கொண்டிருப்பார். அவர்கள் கட்சி MLA களை விலைக்கு வாங்கவும் .... இது இவர்களுக்கு கை வந்த கலையாச்சே.....

  • DVRR - Kolkata,இந்தியா

    திராவிட மாடல் பத்து (பத்து போடுதல் அல்ல) - 1) ஊழல் 2) 45% கமிஷன் 3) இந்து எதிர்ப்பு...கோவில் சொத்து கொள்ளை 6) ...ஆய்வு என்று பின்னால் வரும் வாய்வு போல ஒவ்வொரு காரியம் செய்வது 8) தான் குற்றவாளியாக இருந்து கொண்டு இன்னொருவனை குற்றம் சொல்வது 9) காலையில் எப்படியாவது டிவியில் வருவது...

  • Stalin Soundarapandian - Al Jubaila,சவுதி அரேபியா

    குஜராத்தில் தான் வந்து இறங்கி பிற மாநிலங்களுக்குச் செல்வதாகக் கூறுகிறார்களே.

  • Samathuvan - chennai,இந்தியா

    திருடன் கிட்டேயே சாவியை ஒப்படைப்பது போல தான் இதுவும்.

  • mindum vasantham - madurai,இந்தியா

    annamalai the man of action in Tamilnadu politics

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்