கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, 'பாரத் ஜோேடா யாத்திரை' நடத்து கிறார் காங்., ராகுல்.கன்னியாகுமரியில் நடந்த துவக்க விழா பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசினார். அதைத் தொடர்ந்து, 8, 9, 10 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார், ராகுல். நேற்று மாலை தமிழகத்தில் தன் பயணத்தை முடித்து, கேரளா சென்றுள்ளார்.
கொந்தளிப்பு
பாதயாத்திரையை துவங்க, கன்னியாகுமரி வந்த ராகுல், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்வையிட்டார். பின், காந்தி மண்டபத்திற்கு சென்றார்.கடந்த மூன்று நாட்களாக, சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, தலைச்சன்விளை ஆகிய இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். பயணத்தின் இடையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

அதன்படி, நாகர்கோவிலில் நேற்று முன்தினம், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்ட கிறிஸ்துவ மத போதகர்களை, சர்ச் வளாகத்தில் ராகுல் சந்தித்தார். அது நாடு முழுதும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த 2021 ஜூலை 18ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜார்ஜ் பொன்னையா, ஹிந்து மதத்திற்கு எதிராகவும், தேசத்திற்கு விரோதமாகவும் பேசியவர்.'எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஹிந்துக்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடப் போவதில்லை.
'தி.மு.க.,வின் வெற்றி கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். 'நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றி கொள்ளக்கூடாது என்பதற்காக ஷூ போட்டு மிதிக்கிறோம்' என பொன்னையா கூறியது, தமிழகம் முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், அவர் கைது செய்யப்பட்டார்.இப்படி சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து ராகுல் உரையாடும் வீடியோ, சமூக ஊடகங்களில் நேற்று வெளியாகி அனலை கிளப்பியுள்ளது. அதில், 'இயேசு கிறிஸ்து, கடவுளின் ஒரு வடிவம்; இது சரியா?' என, ராகுல் கேட்கிறார்.அதற்கு பதிலளிக்கும் ஜார்ஜ் பொன்னையா, 'கடவுள் தன்னை ஆணாக, உண்மையான ஒரு மனிதராக வெளிப்படுத்தி இருக்கிறார். சக்தியை போன்று அல்ல. இயேசுவே ஒரே உண்மையான கடவுள்' என கூறுகிறார்.இது, இப்போது நாடு முழுதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் சந்தித்ததை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, நேற்று அவர் அளித்த பேட்டி:பாதயாத்திரையின் போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன், டீ சாப்பிட்டு கொண்டே ராகுல் உரையாடுகிறார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து தரக்குறைவாக பேசியவர் அவர்.
ஹிந்து விரோத போக்கு
ஜார்ஜ் பொன்னையா போன்றவர்களையும், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தை துாண்டியவர்களையும், பிரிவினைவாதிகளையும் மட்டுமே ராகுல் சந்திக்கிறார்.இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் சந்தித்திருப்பது, காங்கிரசின் ஹிந்து விரோத போக்கை காட்டுகிறது' என, விமர்சித்துஉள்ளார்.
'பாதிரியார்களை சந்தித்த ராகுல், கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி, நாகர்கோவில் நாகராஜர் கோவில்களுக்கு ஏன் செல்லவில்லை?' என, சமூக ஊடகங்களில் பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.பா.ஜ., ஆதரவாளர்களும், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கூறியதாவது:காஷ்மீர் சென்றால் வைஷ்ணவிதேவி பக்தராகவும், குஜராத்தில் சிவபக்தராகவும், கர்நாடகாவில் லிங்காயத் தீட்சை பெற்றவராகவும் காட்சி தரும் ராகுல், தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் மட்டும் தான், தன் உண்மையான அடையாளத்தை பேண முடிகிறது.
தன்னை கவுல் பிராமணராக கூறிக் கொள்ளும் ராகுல், கன்னியாகுமரியில் இருந்து தான் தன் பாதயாத்திரையை துவக்கினார். ஆனால், அங்கு பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லவில்லை. ஆனால், கிறிஸ்துவ பாதிரியார்களை சந்தித்துள்ளார். அவர்களுடன் கிறிஸ்துவம் தொடர்பாக, ஆர்வத்துடன் கலந்துரையாடி உள்ளார்.கன்னியாகுமரியில் நான்கு நாட்கள் யாத்திரை மேற்கொண்ட ராகுல், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லுாரி, மார்த்தாண்டம் புனித மேரிஸ் பள்ளி என, கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களிலேயே தங்கியுள்ளார். இதையெல்லாம் குறிப்பிட்டு, 'ராகுல் மேற்கொண்டுள்ளது ஒற்றுமை யாத்திரையா அல்லது பிரிவினை யாத்திரையா?' என, சமூக ஊடகங்களில் நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
-- நமது நிருபர் -
வாசகர் கருத்து (158)
சிலுவையில் அறைந்து கொன்னது யாரு ?அப்புறம் கும்பிடறது யாரு ?
வெளுக்க வேண்டியது மட மக்களே
வெளுக்க
யாரு பெரிய அறிவிலி என்பதில் தகறாரா ? எல்லாருமே நம்பர் ஒன் .. சரியா
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
உண்மையான கடவுள் நம் மனம் தான். (அஹம் ப்ரஹ்மாஸ்மி நானே பிரபஞ்சம் நானே கடவுள் என்கிறது ஹிந்து மதம்) அதனால் நாம் எப்படி கடவுளை காண விரும்புகிறோமோ அப்படி காணலாம் யேசுவாக, அல்லாஹுவாக, ராமனாக கிருஷ்ணனாக என பல வடிவங்களிலோ (வடிவமற்ற தலைவனாகவோ). சிக்கல் எப்போது வருகிறது என்றால் நாம் காணும் வடிவங்களிலேயே மற்றவர்களும் காண வேண்டும் என்று அடம் பிடித்து அவர் காணும் வடிவங்களை இழிவு படுத்தும் பொது தான், என் தாய் எனக்கு உயர்ந்தவள் என்பதற்காக மற்றவர்கள் தாயை இழிவு படுத்தக்கூடாதல்லவா? அது போல் தான் இதுவும்