ADVERTISEMENT
சென்னை : முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல விரும்பினால், நீதிமன்ற அனுமதியுடன் வர வேண்டும் என, காவல்துறை பதில் அளித்ததாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த தகவலும் வரவில்லை என, பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, சென்னை, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., - பிரபாகர், நேற்றுமுன்தினம் மனு அளித்தார். 'பன்னீர்செல்வம் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல, நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால், உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம்' என, போலீஸ் தரப்பில், பன்னீர்செல்வம் தரப்புக்கு பதில் அளிக்கப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து, போலீஸ் நிலையத்தில் மனு அளித்த, பிரபாகர் கூறுகையில், ''போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து, அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. பன்னீர்செல்வம் ஊரில் இருந்து வந்ததும், அனைவருடனும் கலந்தாலோசித்து தலைமை அலுவலகம் செல்லும் தேதியை அறிவிப்போம்,'' என்றார்.
வாசகர் கருத்து (8)
ஓபிஎஸ் என்ற எட்டப்பனுக்கு ,எடப்பாடி என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் கூடாரத்தில் அனுமதி கூடாது.
ஒரு பழமொழி உண்டு வினை விதைத்தவன் வினை அறுப்பான் ..ரகசிய சந்திப்புகள் மூலமாக கட்சியை ஒன்னும் இல்லாமல் செய்ய நினைத்தவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது
இனி இந்த பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புதான்.அந்த தீர்ப்பும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்துச்சுன்னா அப்பறம் பன்னீர்செல்வத்திற்கு ஏற்கனவே வெட்டியாக இருக்கும் சசிகலா மற்றும் தினகருடன் சேர்ந்து நடுத் தெருவுக்கு வருவதை தவிர வேறு போக்கிடம் இல்லை.
இவர் பூட்டை உடைத்து ஜேவின் ரூம்குள் நுழைந்தாரோ ஆண்ரெ எல்லாம் முடிந்துவிட்டது ... இவரை நம்பும் அதிமுகவினர் துரோகிகளே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஒரு நிறுவனத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறார். அவரை சில காரணங்களினால் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கி விடுகிறார்கள். அப்போது அந்த நபர் "நான்தான் எல்லாம்... மறுபடியும் அலுவலத்திற்கு வருவேன்." என்றெல்லாம் அந்த நபர் பேசினால் அவன் பைத்தியகாரனாகத்தான் இருப்பான்... இதற்கும் பன்னீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை