Load Image
Advertisement

தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய சவுதி பொறியாளர்

 தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய சவுதி பொறியாளர்
ADVERTISEMENT
சென்னை : தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா கொப்பம்பட்டி கிழக்கு காலனியை சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.


அத்துடன், முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதம்: நான் சவுதி அரேபியாவில் பொறியாளராக பணிபுரிகிறேன். பொருளாதாரம் படிக்கிறேன். தமிழகத்தின் 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை செய்தி வழியே பார்த்தேன். அதில், 2023 மார்ச் 31 நிலவரப்படி, தமிழக அரசின் கடன் 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடி.அடுத்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, ஒவ்வொரு தமிழனின் மீதும் உள்ள தமிழக அரசின் கடன், 90 ஆயிரத்து 558 ரூபாய். இதை அறிந்து வருத்தம் அடைந்தேன். கடன் தீர என் பங்களிப்பை செலுத்த முடிவு செய்தேன்.


அதற்காக கடந்த ஆறு மாதத்தில், 90 ஆயிரத்து 558 ரூபாய் சேமித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன். தமிழக அரசின் கடனை செலுத்த என் பங்களிப்பை பயன்படுத்தவும். தமிழகம் ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (20)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    எல்லோரும் இப்படி அனுப்பினால் அரசு மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு கடன் இல்லை என்று ஒரு சான்றிதழ் வழங்குவார்கள் .அதை வைத்து கொண்டு தமிழகம் ......

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    அவனே தமிழகத்தில் கொள்ளை அடித்து கொண்டு துபாயில் முதலீடு செய்யும் போது நீங்கள் துபாயில் உழைத்த பணத்தை தமிழகம் அனுப்பி மறுபடியும் துபாய்க்கு தனிவிமானம் மூலம் அங்கு வரும் செலவை தவிர்க்க ஸ்டாலின் பெயரில் துபாயில் ஒரு பாங்க் அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் டெபாசிட் செய்து பாங்க் ரிசிப்ட அனுப்பி வைங்க போதும் நல்லவரே.

  • GANESUN - Chennai,இந்தியா

    பணம் பெற்றுக் கொண்டேன் நன்றி... ஏய் யாரங்க? இந்த பணத்த கொண்டு போய் முரசொலி ஆபீஸில கட்டிடு..லைபரெறிங்களுக்கு பேப்பர் போட்ட காசு பெண்டிங்ன்னாங்க...

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    திராவிட கும்பல்கள் இலவசங்களை கொடுக்க, பேனா சின்னம் கட்ட, பொழுதுபோக்கு பூங்கா கட்ட வசதியாக இருக்கும் அடுத்து அடுத்து இவர்கள் வந்து டாஸ்மாக் கடைகளை விரிவுபடுத்தி, கல்வி தரத்தை சீர்ழழித்து, இந்தி போன்ற மற்ற மொழிகளை படிக்க விடாமல் செய்து தமிழக மக்கள சொந்த புத்தியில் வேலை செய்ய விடாமல், தேசியசிந்தனையில் சேரவிடாமல் தமிழர்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் இந்து மக்கள் மணம் புண்படுத்தி அதில் இன்பம் கான வசதியாக இருக்கும் அதற்கு விடியல் ஆட்சி என்று கூறி தமிழர்களை கடுப்பேத்த வசதியாக இருக்கும். வாழ்க தமிழ். ஜெய் ஹிந்த்.

  • Sridharan - Coimbatore,இந்தியா

    எங்கள் கோவை நகராட்சியில் ஒரே ஒரு நாள் வந்து பாருங்கள். நீங்கள் கொடுத்த பணத்தை ஒரே நாளில் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லி தருவார்கள். காந்தி படம் உள்ள காகித்தை காண்பித்தாள் போதும். அணைத்து காரியங்களும் கட்சிதமாக முடித்து கொடுப்பார்கள். காலையில் அலுவலகம் வரும் பொது பரதேசியாக வருபவர்கள் மாலை வீட்டிற்கு செல்லும் பொது பரஞ்சோதியாக செல்வார்கள். இதுதான் கோவை நகராட்சி ஊழியர்களின் அரசாங்க ஊழியம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement