Load Image
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி :தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.



'சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக, குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது' என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, 'குற்றவாளியுடன் சமரசம் ஏற்படுத்தி, வழக்கை முடிப்பது' என்ற அரசியல்வாதிகளின் போக்குக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அமைச்சரவையில், மின் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் செந்தில் பாலாஜி; அ.தி.மு.க., பொதுச் செயலராக, மறைந்த ஜெயலலிதா இருந்தபோது, அக்கட்சியில் இருந்தவர்.

போலீசில் புகார்



ஜெயலலிதா தலைமையில், 2011 - 16 வரையிலான ஆட்சியின் போது, போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார்.கடந்த 2015ல், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய செந்தில் பாலாஜி, பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக, கணேஷ் குமார், தேவசகாயம் என்பவர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு



இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகம் தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டதால், அவர்கள் சமரசமாக போக விரும்புவதாக, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இதை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து, தர்மராஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், போபண்ணா, ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பாக இது போன்ற விவகாரங்களில் வழக்கு தொடர, உயர் நீதிமன்றம் எப்படி தடை விதித்து இருக்கும் என்பது புரியவில்லை.
வேலை பெறுவதற்காக பணம் கொடுப்பவர்கள், இரண்டு பிரிவினராகக் கருதப்பட வேண்டும்.


முதல் பிரிவினர், பணம் கொடுத்து அந்த வேலையை பெற்றவர்கள்; இரண்டாவது பிரிவினர், பணம் கொடுத்தும் வேலையை பெறாதவர்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், பணத்தை திரும்பப் பெற்று தங்கள் வழக்கை முடித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், பணம் கொடுத்து வேலை பெற்றவர்கள், அதை ஏற்றுக் கொள்வதாக கருதப்படும். வேலைக்காக லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும் அங்கீகரிக்கப்பட்டதான நிலை ஏற்படும். இது நல்லதல்ல.

எனவே, செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை ரத்து செய்யும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது. அரசு ஊழியர் ஊழல் செய்வது, அரசுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் எதிரான செயல்.சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக, குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது. இந்த வழக்கை, தமிழக அரசு துவக்கத்தில் இருந்து முழுமையாக விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.இந்த உத்தரவை அடுத்து, செந்தில் பாலாஜி மீதான வழக்கு மீண்டும் துவக்கத்திலிருந்து விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், செந்தில் பாலாஜி பதவி பறிபோகும்.


அமைச்சர் கருத்து!

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முழு விபரங்களை படித்து பார்க்க வேண்டும்.ஏற்கனவே நடந்த விசாரணை, சரிவர நடைபெறவில்லை. ஆகையால், முறையாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (25)

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    குற்றம் நிரூபிக்கப்பட்டால், செந்தில் பாலாஜி பதவி பறிபோகும்... ம்க்கும் இன்னக்கி விடியல் ஆட்சில விசாரிச்சு குற்றம் நிரூபிச்சு குப்புற விழறது அதுக்குள்ள விடியலே முடிஞ்சிரும்

  • buvan -

    இப்போது அதற்கு வழி இல்லை!

  • Yokiyan - Madurai,இந்தியா

    பாஜகவில் இணைத்தால் புனிதராங்கலாம். செய்வாரா செந்தில் பாலாஜி?

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    நல்லவேளை இந்தத் தீர்ப்பை ஜஸ்டிஸ் வி. ராமசுப்ரமணியன் மட்டும் தனி நீதிபதியாக வழங்கவில்லை - அவருடன் ஜஸ்டிஸ் அப்துல் நசீரும் சேர்ந்த பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கி உள்ளது ஜஸ்டிஸ் ராமசுப்ரமணியன் மட்டும் தனி நீதிபதியாக இந்த உத்தரவை வழங்கி இருந்தால் - 'திராவிட மாடல்' பொங்கி எழுந்திருக்கும் இப்போது அதற்கு வழி இல்லை

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Amaichar meethu vazhakku pottaalum athu nermaiyaaka nadakkaathu.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement