மத்திய அரசின், 'சென்ட்ரல் விஸ்டா' மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையின் பெயர், கர்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப் பாதையின் இரு பக்கங்களிலும் பச்சைபசேலென புல்வெளி, வாகன நிறுத்துமிடம், மக்கள் அமர்ந்து இளைப்பாற நாற்காலிகள், கழிவறைகள், பல்வேறு உணவகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அங்கு இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியதை செலுத்தினார்.
காலனிஆதிக்கத்துக்கு முடிவு: அமைச்சர் பூரி
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேசியதாவது. கர்தவ்யா பாதை இந்தியாவின் பெருமை. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமரின் வாழ்நாள் கனவு நிறைவேறிஉள்ளது. இது நாள் வரை மக்கள் மனதில் இருந்த காலனி ஆதிக்கம் என்ற எண்ணம் நீங்கியது. காலனி ஆதிக்கத்ததுக்கு பிரதமர் மோடி முடிவு கட்டி உள்ளார். இதன் மூலம் புதிய இந்தியாஎழுச்சி பெற்றுள்ளது என அமைச்சர் கூறினார்.
வாசகர் கருத்து (10)
மறக்கப்பட்டு வைத்து இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை, அவரின் வீரத்தை மீண்டும் uyirppiththatharkku பிரதமருக்கு நன்றி.
நாடு ஒன்றும் மாறப்போவதில்லை... இந்தக் கூட்டத்தை இன்னும் நம்பி அல்லல்படும் மக்கள்....
கிடப்பது ஒருபுறம் கிடக்க, கிழவியை தூக்கி மனையில் வைத்தார்களாம்...
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் திரு மோடி.
ஈர வெங்காயத்துக்கு சிலை வைத்தால் நாடு வளர்ந்துவிடும். ஆனால் "நேத்தாஜிக்கு சிலை வைப்பதால் நாடு மாறப்போவது இல்லை"... இதுதான் திராவிடியல் லாஜிக்.