சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் சதவீதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.
தேர்வு எழுதிய 17.64 லட்சம் பேரில், 9.93 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில் 1.17 லட்சம் பேரும், மஹாராஷ்டிராவில் 1.13 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 82,548 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவீதம் 51.3 ஆகும். கடந்த 2020ம் ஆண்டு 57.44 % ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டில் 54.4% ஆக குறைந்தது. இந்த ஆண்டு 51.3 % ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இதனால், நீட் தேர்ச்சி பட்டியலில் கடந்த ஆண்டு 23வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 28 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இது தொடர்பாக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கொரோனா பாதிப்புகளால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த ஹைடெக் பயிற்சி வழங்குகிறோம் என்றார்.
வாசகர் கருத்து (72)
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களையும்.. நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய போகிறோம் என்று சொல்லி படிக்க விடாமல் செய்த இந்த அரசு தான் பொறுப்பு
உங்க அங்கலாய்ப்பு புரியுது அதனாலதான் நாங்க நீட் தேர்வே தமிஷகத்துக்கு வேணாம்ன்னு போராடறோமே நீட் தேர்வு ரத்துங்கறது குட்டிக்கரணம் பொட்டலும் நாடெங்க்காதுன்னு எங்களுக்கு தெரியும் ஆனா எங்க மக்கள் நாங்க சொல்றதை நம்பறாங்களே ஏமாறவங்க இருக்கும் வரிக்கும் ஏமாத்தறவங்களும் இருக்கதான் செய்வாங்க. எப்படியும் ரெண்டு மூணு தற்கொலைகள் இருக்கும் அதை வெச்சி இந்த வருஷத்தை ஒட்டிடலாம்
நீட் ரத்து என்ற பொய் பிரசாரம், உறுதி என்று சட்டசபையில் பேசியது எல்லாம் தான் மாணவர்களை திசைதிருப்பியது . ஹை டெக் பயிச்சி வகுப்பறையில் இருந்து அந்த ............போன் . தன்டக்கல் கோணி பாட நூல் ..........
குடும்ப தலைவிகளுக்கு தலா ரூபாய் ஆயிரம் அளிக்கப்படும், அதற்கான கோப்பில் முதல் கையொப்பத்தினை மு.க.ஸ்டாலின் இடுவார் என்று கூறினார்கள். இன்னும் ஒப்பம் போடும் பணியை ஆரம்பிக்கவில்லை என்று தெரிகிறது. இப்போதுதான் எண்பத்தைந்து கோடிக்கு பேனா அமைக்கும் செயல்பாடு ஆரம்பமாகப்போகிறது. அந்த பேனாவையெடுத்து வந்து இன்னும் எஞ்சியுள்ள ஆட்சி காலத்தில் எத்தனை கோப்புகள் உண்டோ அனைத்திலும் ஒப்பம் இடப்படும். நம்புங்கள் அதேபோல் எங்கள் ஆட்சி தொடரும் காலம் வரையிலும், நீட் தேர்வினை ஒழிக்க பாடுபடுவோம், தீர்மானம் இயற்றி அனுப்பிக்கொண்டே இருப்போம். கவலையே வேண்டாம். எதற்கும் தயாராக இருங்கள்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் கையெழுத்து நீட் ரத்து... அடுத்த கையெழுத்து டாஸ்மாக் ரத்து என்று சொன்னார்கள்.. அந்த இரண்டுமே இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.. அப்போ எந்த திட்டமும் செயல்படுத்த வில்லையா? 70 கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று சொன்னது எல்லாம் பொய்யா கோபால்????