ADVERTISEMENT
வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கோவிட் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. அங்கு இதுவரை 9 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோசும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இனி ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் அதனை சமாளிக்க இந்த நடைமுறை உதவும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கோவிட் வைரஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போடப்படும் காய்ச்சல் தடுப்பூசி போல் கோவிட் தடுப்பூசியும் அவசியம் செலுத்தப்படும் என்றும், மக்கள் அதனைச் செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (4)
அட ...மருந்து கம்பெனி காரன்ட்ட அடுத்த election காசு வாங்கியாச்சா?
நீங்கள் ஜோபடினா அல்லது பிக் பார்மா பைடினா ?
ஒருவேளை கோவிட் முற்றிலும் போய்விட்டது என்று வைத்துக்கொள்வோம. மீண்டும் அந்த சைனா காரன் வேறு ஏதாவது வைரஸ் பரப்பினால், அப்புறம் அதற்கு ஒரு தடுப்பூசி போடவேண்டி இருக்கும். அப்பவும் இந்த கோவிட் தடுப்பூசி ஆண்டுதோறும் போடுவீர்களா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஃப்ளு சீசனில் புதுப்புது தடுப்பூசிகள் வடிவமைக்கப் பட்டு போடப்படுகிறது. இங்கே மாதிரி கெவுருமெண்ட் தடுப்பூசி வாங்கி போடும் வழக்கம் அங்கே இல்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது உங்கள் விருப்பம். அடிச்சு முடக்க மாட்டாங்க. கோவிட் தடுப்பூசி இலவசம். இங்கே மாதிரி பீத்திக்க மாட்டாங்க.