மக்களிடம் இணையதள வசதி கொண்ட மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ரயில்வேயில் பல்வேறு சேவைகள், இணையதளம் வாயிலாக அளிக்கப்படுகின்றன.
வேகம் இல்லை
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட், தங்கும் விடுதி, பேட்டரி கார்கள், உணவுஆர்டர்கள் என, பல்வேறு முன்பதிவு வசதிகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
சமீப காலமாக, இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு, சர்வர் பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக, பயணியருக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க உதவும் 'தத்கல்' திட்டத்தில், ரயில் டிக்கெட் எடுப்போரின் நிலை பெரும் பாடாக இருக்கிறது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது :ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பெல்லாம் ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்வர். தற்போது, ஆம்னி பஸ்கள் டிக்கெட் பதிவு, உணவு 'ஆர்டர்' செய்வது, ஓய்வு அறைகள், ரயில் நிலைய 'வீல் சேர்' முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த இணைய தளத்தின் சர்வர் வேகம், போதுமான அளவில் இல்லாததால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இணையதளம் முடங்கி விடுகிறது. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில், ரயில்வே துறை இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்காணிப்பு
ஐ.ஆர்.சி.டி.சி., உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ஆறுகோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து, பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஒன்பது லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. தொழில்நுட்ப பாதிப்பு ஏற்படாத வகையில், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
தொழில்நுட்ப பிரச்னைக்கு ஐ.ஆர்.சி.டி.சி., மட்டுமே காரணமல்ல; சில நேரங்களில் டெலிகாம் நிறுவனங்கள், வங்கிகளின் சர்வர் பிரச்னையும் காரணமாக உள்ளது. பயணியரின் புகார்கள் குறித்து, ரயில்வேயின் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதற்கு, ரயில்வே உரிய தீர்வு காணும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (9)
சர்வர் பிரச்சனை அல்ல.. அதிகாரிகளின் பிரச்சனை.. அதிகாரிகலால் பிரச்சனை.. ஏஜெண்டுகள் புக் செய்தால் கிடைக்கும் தஃதல் டிக்கெட் பொது மக்கள் செய்தால் கிடைப்பதில்லை..
(தற்காலம்) தத்கால் எனக் குறிப்பிடுவதுதான் சரியான முறை.
காசு உருவறதிலேயே குறியாயிருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி. அதுக்கு துணைபோகும் குன்றிய அரசு.
நான் எந்த கட்சிக்கும் ஆதரவானவன் கிடையாது... அதான் நம் நாடு ஏதோ உலகத்திலேயே எல்லாவற்றிலும் சாதித்து விட்டது என்று மார்தட்டிக் கொண்டு ஒரு கூட்டம் அலைகிறதே அந்த கூட்டத்திற்கு இதெல்லாம் கண்ணில் படவே படாது.. கேட்டால் முந்தைய ஆட்சி காரணம் என்று பலி போடுவார்கள்.. நான் பெங்களுருக்கு வேலைக்கு போதும் அங்கிருந்து ஊருக்கு வரும்போதும் இதே பிரச்சனைதான் இருந்தது.. ஊருக்கு வந்து போவதற்குள் பஸ்சிற்கு தெண்டம் அழ வேண்டும். 12 வருடமாகியும் அதே கொடுமை. இதை விட கொடுமை இந்த பாழாய் போன ஆதார் சர்வர் என் அம்மாவின் ஆதார் தகவல்களை திருத்தம் செய்ய குறைந்தது 1.75 வருடம் ஆனதுஇவர்களுக்கு அதை சாதித்து விட்டோம் இதை சாதித்து விட்டோம் என்று மார்தட்டி பெருமை பேசவே நேரமில்லை.. இதில் இந்த மாதிரி பிரச்சினைகள் பற்றியெல்லாம் கண்களுக்கு தெரியாது அம்பாணி, அதாணி வளர்ந்தார்களா என்று வேண்டுமானால் அதீத அக்கறை கொள்வார்கள்....வாழ்க இந்தியா
2047 க்குள்ளே எல்லாம் சரியாக்கி தந்து, இந்தியா வல்லரசாயிடும். அதுவரை சகிச்சுக்கிட்டே இருங்க.