Load Image
Advertisement

எங்க கிட்ட அதிமுக.,வின் 50 எம்எல்ஏ, 2 எம்பி.,க்கள் இருக்காங்க: திமுக ஆர்.எஸ்.பாரதி பதில்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


திமுக எம்எல்ஏ.,க்கள் 10 பேர் அதிமுக.,வில் சேர்வதற்காக பேசிக்கொண்டிருக்கின்றனர் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ள தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருக்கின்றனர்.

Latest Tamil News
அதிமுக.,விடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ.,க்களின் பட்டியலை பழனிசாமி வெளியிட்டால் நானும் பட்டியலை வெளியிடுகிறேன். உண்மையான திராவிட இயக்கம் திமுக தான். அதிமுகவில் இருந்து பலபேர் எங்களுடன் வந்துள்ளனர்; இதனை யாரும் மறுக்க முடியாது. எனவே, அதிமுக.,வினர் திமுக.,வில் இணைய வேண்டும். ராகுலின் யாத்திரை என்பது பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. கடந்த தேர்தலில் 37 சதவீத ஓட்டுகள் வாங்கிதான் மோடி பிரதமரானார். அதாவது 63 சதவீத ஓட்டுகள் மோடிக்கு எதிர்ப்பாக வந்துள்ளது.


இத்தகைய 63 சதவீத ஓட்டுகளையும் ஒன்றாக திரட்டும் பணியில் தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல் ஈடுபட்டுள்ளனர். இந்த யாத்திரை என்பது 2024ல் மிகப்பெரிய மாற்றத்தை மத்தியில் உருவாக்கும். அடுத்த பார்லி தேர்தலில் திமுக.,வின் பங்கு நிச்சயமாக பெரியளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (20)

 • அருணகிரி சுந்தரமூர்த்தி -

  விலை என்ன என்று சொன்னால் வியாபாரத்தை ஆரம்பிக்கலாம்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  எங்க கிட்ட அதிமுக.,வின் 50 எம்எல்ஏ, 2 எம்பி.,க்கள் இருக்காங்க. அவுங்களுக்கு விலை கொடுத்து வாங்க எங்களிடம் பல லட்சம் கோடி பணமும் (மக்களிடம் ஆட்டையை போட்டதுதான்) இருக்கிறது. இப்படி பகிரங்கமாக அறிக்கை விடும் இவரை உள்ளே தூக்கிப் போட முடியாதா மிஸ்டர். சைலேந்திர பாபு?

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  எந்த கடையில சாப்பிட்டீங்க ரொம்ப தூக்கலா இருக்கு....தலைவிதி

 • Rajan -

  இரண்டு கட்சிகளுமே தமிழ் நாட்டின் கனிம வளங்களை சூறையாடி கேரளாவுக்கு கடத்தல் செய்து பல்லாயிரம் கோடிகளை விழுங்கி விட்டனர். இரண்டு கட்சிகளுமே திருடர்கள் நிறைந்த கட்சி .... தமிழக மக்களின் வரிபணத்தை தவறான வழிகளில் விரயம் செய்து வீணடித்துள்ளனர்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  தமிழகத்தை சுரண்ட இனி ஒன்றும் இல்லை. எழுபது சதவிகிதம் திமுகவும் முப்பது அதிமுகவும் சுரண்டியாச்சு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement