சென்னை: கன்னியாகுமரியில் பாத யாத்திரையை துவங்கும் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜூன் சம்பத் கைது செய்வதை கண்டித்த பாஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, 'எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது, பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் விட்டு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தது, ஆனால் ராகுலுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டச் சென்ற அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது கண்டிக்கத்தக்கது' என தெரவித்துள்ளார்.

அர்ஜூன் சம்பத் கைதை கண்டித்து பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்ததாவது: எதிர்க்கட்சியாக இருந்த திமுக, பிரதமருக்கு எதிராக 'கோ பேக் மோடி' என்று கூறி கருப்பு பலூன் விட்டது. ராஜ்பவன் முன் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்தது. ஆனால் ராகுலுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜூன் சம்பத்தை நள்ளிரவில் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (26)
பாத யாத்திரை எதற்கு என்றால்,ஹெரால்ட் வழக்கு சம்மன்களை புறக்கணிக்க. ஆனால் அது நடக்காது. சட்டம் எதற்கும் காத்து இருக்காது.
பாஜ வுக்கு ராஜா செய்யும் சேவை மகத்தானது. பாஜ விடம் சகிப்புத்தன்மை கொஞ்சம் இல்லை என்பதை தெளிவாக்குகிறார். உண்மையில் ராகுலின் கருத்துகளுக்கு ஆதார பூர்வமான மறுப்பதை தயாரித்து மக்களிடம் தர முயன்றால் பாராட்டலாம். காங்கிரஸ் 65ஆண்டுகளாக செய்ததாக இவர்கள் கூறும் தவறுகளை 10ஆண்டுகளுக்குள் பாஜக செய்துள்ளதாக பலர் நினைக்க ஆரம்பித்து விட்டனர்
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த இடம் தெரியாத இவரைப் போன்ற ஆசாமிகள் கடந்த ஆட்சியில் இந்து என்ற பெயரை முன்னால் சேர்த்துக்கொண்டு மதரீதியாக மக்களை பிரித்து அதில் அரசியல் குளிர்காய இவரை போன்று நிறைய இந்து விரோத, மக்கள் விரோத ஆசாமிகள் தமிழ்நாட்டில் தலையெடுத்து விட்டார்கள். இதை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
,,,,,,