Load Image
Advertisement

போலீசாருக்கு அப்டேட் அவசியம்! ரவுடிகளை கண்காணிக்க டி.ஜி.பி., உத்தரவு

 போலீசாருக்கு அப்டேட் அவசியம்! ரவுடிகளை கண்காணிக்க டி.ஜி.பி., உத்தரவு
ADVERTISEMENT
சென்னை : 'குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும், போலீசார் கண்காணிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, பிப்ரவரியில் மாநிலம் முழுதும், போலீசார் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 3,325 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, கத்தி உட்பட, 1,110 ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அதன்பிறகும், அவ்வப்போது சோதனை நடத்தி, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Latest Tamil News
இந்நிலையில், மாநிலம் முழுதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளார். அவர்களில், சிறைகளில் இருப்போர், ஜாமினில் வெளியே வந்துள்ளோர் பற்றிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ரவுடிகளுக்கு தஞ்சம் அளிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும், போலீசார் தகவல்கள் திரட்டி வருகின்றனர்.


அத்துடன், ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் வசிக்கும் ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் குறித்த விபரங்களை சேகரித்து, போலீசார், 'அப்டேட்'டில் இருக்க வேண்டும்.


இதுபோன்ற நபர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிப்பதும், போலீசாரின் அன்றாட பணிகளில் ஒன்றாக பின்பற்றப்பட வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வாய்மொழியாக நேற்று உத்தரவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து (19)

  • அப்புசாமி -

    எவனைக்.கைது பண்ணினாலும் அவன் மேலே ஏற்கனவே 10 , 15 கொலை, கொள்ளை, கடத்தல், அடிதடி வழக்குகள் இருக்கும். இந்த லட்சணத்தில் அவிங்களை கண்காணிக்கணுமாம். சிரிப்பு போலீஸ்.

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

    இதுக்கு என்ன சார் கனவுலேட்ஜ் தேவை திமுக உறுப்பினர் அட்டை இருக்குதா என்று பார்த்தால் போதாதா . போங்க சார் சீக்கிரமா ஒய்வு பெற்று சைக்கிளே ஒட்டிக்கிட்டு இருங்க

  • ram - mayiladuthurai,இந்தியா

    முதலில் அப்டேட் இவரிடம் இருந்து ஆரம்பித்தாள் நல்லது

  • KavikumarRam - Indian,இந்தியா

    அப்படியே கஞ்சாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைக்கு உத்தரவுன்னு ஒரு வீடியோவை எடுத்து யூடியூப்ல அப்லாட் பண்ணி விடுங்க. அந்த வேலையும் முடியும்ல. அந்தாக்குல வீடியோ கேம் விளையாடபோயிறலாம்.

  • KavikumarRam - Indian,இந்தியா

    இத நீங்க பேசாம உங்க ஆப்பீஸ் மொட்டை மாடில நின்னு உங்க போன் வீடியோ கேமரால பேசி யூடியூப் சேனல்ல அப்லாட் பண்ணிருக்கலாம். பேப்பர் செலவும், பேனாமை செலவும், ஃபேக்ஸ் செலவுமாவது மிச்சப்பட்டிருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்