Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய கடற்படையில் ப்ரெஷ்சர்களுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

Tamil News
ADVERTISEMENT
இந்திய கடற்படையில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்., 07) கடைசி தேதி. க்ரூப் ஏ (அரசிதழில் இடம்பெற்ற அலுவர்) பணியான இதற்கு 19 முதல் 25 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.56,100 ஆகும்.


முப்படைகளில் ஒன்றான இந்திய கடற்படையில் நேரடி தேர்வு மூலம் உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொறியியல், சட்டப்படிப்பு, ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் வணிக பைலட் உரிமம் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் பொதுப் பணி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்சில் டெக்னிக்கல் பணி, வணிக பைலட் லைசென்ஸ் பணி ஆகியவற்றில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கடற்படை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தகுதி



Latest Tamil News உதவி கமாண்டென்ட் பொதுப் பணிக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ முடித்து டிகிரி பயின்றவர்களும் டிப்ளமோவில் கணிதம், இயற்பியலில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


வணிக பைலட் லைசென்ஸ் தேவையான பணிக்கு ஆண்கள், பெண்கள் இருவரும் தகுதியானவர்கள். இதற்கான தகுதி +2 அல்லது டிப்ளமோ. மேலும் கணிதம் மற்றும் இயற்பியலில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் விமான போக்குவரத்து இயக்குனரால் உறுதி செய்யப்பட்ட நடப்பில் உள்ள வணிக பைலட் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.


டெக்னிக்கல் பணிக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள். மெக்கானிக்கல், மைரன், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலார்ஜி, டிசைன், ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற பல பொறியியல் துறையினர் இதற்கு தகுதியானவர்கள். 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். +2வில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


சட்டப் பிரிவிற்கான பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதியானவர்கள். அங்கீகாரம் பெற்ற பல்கலையில் 60% மதிப்பெண்ணுடன் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு!



பைலட் பணிக்கான வயது வரம்பு 19 முதல் 25 வரை. மற்ற துறையில் வயது வரம்பு 21 முதல் 25 வரை. பட்டியலினத்தவர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (க்ரீமி லேயர் இல்லாதவர்களுக்கு மட்டும்) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை



Latest Tamil News இப்பணிக்கான தேர்வு முறை 5 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் ஆங்கிலம், ரீசனிங், பொது அறிவியல், கணிதம், பொது அறிவு ஆகிய பிரிவுகளில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கு. பொறியியல் முடித்தவர்களுக்கு இந்த பிரிவுகளில் தலா 10 மதிப்பெண்களும், துறை ரீதியாக 60 மதிப்பெண்கள் என 100 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும்.


2ம் கட்ட தேர்வு சென்னை, கோல்கட்டா, மும்பை, நொய்டா ஆகிய குறிப்பிட்ட நகரங்களில் நடக்கும். இதில் ஆங்கிலத்தில் குழு விவாதம் ஆகியவை உண்டு.


3ம் கட்டமாக உளவியல் தேர்வு, குழு பணி, நேர்காணல் இருக்கும்.


4ம் கட்டமாக சிறப்பு மருத்துவ தேர்வு நடத்தப்படும்.


இறுதியாக அனைத்திலும் தகுதி பெறுபவர்கள் மெரிட் லிஸ்ட்டில் இடம்பெறுவர். காலி பணியிடங்களின் படி அவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.

முழுமையான அறிவிப்பு விவரங்கள் கொண்ட இணைப்பு



https://joinindiancoastguard.cdac.in/cgcat/assets/img/news/Advertisement_for_Asst_Comdt_02-2023_Batch.pdf

விண்ணப்பிக்க வேண்டிய இணைப்பு



https://joinindiancoastguard.cdac.in/cgcat/upcoming.html



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement