Load Image
Advertisement

பெங்களூருவை சூழ்ந்த வெள்ளம்: மின்சாரம் துண்டிப்பு; கடும் பாதிப்பு

Tamil News
ADVERTISEMENT

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து 3 நாளாக பெய்த கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ந்து வரும் நகரில் வளர்ச்சி பணிகள் முறையாக திட்டமிடப்படாததால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

Latest Tamil News

நகரில் வெள்ள நீர் வடியாததால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் ஊழியர்கள், டிராக்டர் மூலம் பணிக்கு சென்றனர். பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் உள்ள குடிநீரேற்றும் இடத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
Latest Tamil News

ஐடி நிறுவனங்கள் அமைந்த பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 500 மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், தான் பெங்களூரு வெள்ளத்தில் மிதப்பது தெரியவந்துள்ளது.
Latest Tamil News

முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பெங்களூருவில் அவசர நிலையை சமாளிக்க ரூ.300 கோடி ஒதுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வெள்ள சூழ்நிலையை சமாளிக்கவும் ரூ.300 கோடி ஒதுக்கப்படும். வெள்ளத்தில் 430 வீடுகள் முழுமையாகவும், 2,188 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 225 கி.மீ., சாலைகள், பாலங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

இளம்பெண் பலிபெங்களூருவின் வைட் பீல்ட் பகுதியில் வெள்ளத்தில் டூவிலரை தள்ளிச்சென்ற அகிலா(23) என்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வெள்ளத்தில் நிலை தடுமாறியதால், அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்துள்ளார். அதில், மின்சாரம் பாய்ந்ததால், அகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (33)

 • theruvasagan -

  இப்ப பெங்களூர்ல ஓடினது டிரையிலர்தான். மெயின் பிக்சர் நவம்பர் டிசம்பரில் ரிலீசாகப் போறது நம்ம சிங்காரச் சென்னையிலதான். அதுவும் ஷோவுக்கு ஷோ கேப் விடாம ஓடும். தயாரிப்பு வினியோகம் ஸ்கீரினிங் எல்லாம் நம்ம லோக்கல் கம்பேனிதான். ஆனந்த வெள்ளத்துல மூழ்க தயாரா இருங்க. அதனால எல்லாரும் மறக்காம பால்கனி டிக்கட்டே புக் பண்ணிக்குங்க.

 • theruvasagan -

  அங்ககேயும் சரி இங்கேயும் சரி. அரசியல் வியாதிகளான ரியல் எஸ்டேட் முதலையாளிகள் கழனி காடு கம்மா கரை ஒண்ணு விடாம ஆக்கிரமிச்சு எல்லாத்து மேலயும் ரோடு போட்டு வீடு கட்டிட்டானுக. அப்புறம் மழைத் தண்ணி வீட்டுக்கும் ரோட்டுக்கும் வராம காட்டுக்கா போகும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பாஜாக்கா பங்கு 40% + துறை பொறியாளர், அதிகாரிகள் பங்கு 28% + கான்டராக்டர் லாபம் 30% போக மிச்சம் 2% இல் கட்டப்பட்ட கட்டமைப்பு தான்னு ஊரே மெச்சுதே. ஹா ஹா ஹா. பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் 10,000 கோடி, எங்கே போகுதுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஊழல் இல்லைன்னு மேடையில் கூவும் மோடி மற்றும் கூட்டம். முகத்திரை கிழிந்து தொங்கும் அவலம்.

 • அப்புசாமி -

  அதான் முந்தைய அரசு மீது பழி போட்டு தப்பிச்சாச்சே... பொம்மைக்கு முன்னாடி முதல்வரா இருந்தவர் எடியூரப்பா. அவரைக் குறை சொல்ல மாட்டாரு. ஏன்னா இவரும் அவரும் ஒரே மட்டை. பெங்களூர் கடந்த 30, 40 வருஷங்களா சீரழிஞ்சிட்டிருக்கு. பேசாம திப்பு சுல்தாந்தான் காரணம்.கெம்ப கௌடாதான் காரணம்னு சொல்லிடுங்க.

 • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

  ஆட்சில எந்த கட்சிக்காரனா இருந்தாலும் நியாயம் இருக்கணும் அடாவடி பண்ணா அப்போ வரும் பஞ்ச பூதங்களில் ஒன்று பாத்து திருந்துங்க ஆப்கனிஸ்த்தான் பாக்கிஸ்தான் ஒன்னு தீவிரவாதம் இல்லேன்னா மறுநாளே கொள்ளை நோய் மழை வெள்ளம் புயல் நிலநடுக்கம் நிலச்சரிவு காட்டுத்தீன்னு வரும் கண்கூடா பார்க்கிறோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
Advertisement