அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில், பழனிசாமிக்கு ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அக்கட்சி மேலிடத்திடம், பழனிசாமி மீண்டும் நெருக்கம் காட்ட விரும்புகிறார்.

அ.தி.மு.க., ஆட்சியின் போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் போன்றவர்களிடம், பழனிசாமி தரப்பினர் நெருக்கமாக இருந்தனர். அதே நெருக்கத்தையும், நட்பையும் மீண்டும் புதுப்பிக்கும் வகையில், பழனிசாமியின் துாதர்களாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர், புதுடில்லி
சென்றனர்.
இருவரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளனர்.இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. பன்னீர்செல்வம் அணி, கட்சி அமைப்பு ரீதியாக பலமாக இல்லை.பழனிசாமி அணியில் முழுக் கட்சியும் அடக்கம் என்ற தகவலை, பா.ஜ., மேலிடத்திடம், மத்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சரை பழனிசாமியின் துாதர்கள் சந்தித்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -
வாசகர் கருத்து (24)
கருணாநிதி மட்டும் இருந்திருந்தா, காங்கிரெஸ் கழட்டி விட்டுட்டு பழனிசாமிக்கு முன்னாடியே பாஜகவோட கூட்டணி வெச்சிருப்பாரு. அவருக்கு பதவிதான் முக்கியம். பாவம் அவருக்கு பிழைக்கத் தெரியாத பிள்ளையா போய்ட்டார் நம்ம முதல்வர்.
வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக வாழ்ந்தவருக்கு சுதந்திரமான வாழ்க்கை வாழப் பிடிக்காது.
பன்னீர் ஒரு மண் குதிரை அதை நம்பி தேர்தல் ஆற்றில் இறங்கினால் அவ்வளவுதான் என்பதை பிஜேபி உணர்ந்து கொள்ள வேண்டும். தப்பி தவறி மீண்டும் சசிகலா கும்பல் அதிமுகவுக்கு வந்து ஆட்சிக்கும் வந்து விட்டால் தமிழகத்தை மொட்டையடித்து விடுவார்கள். அப்புறம் பிஜேபி பேசும் லஞ்ச ஊழல் ஒழிப்பு கானல் நீர்தான்.
கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு பதவிக்காகவும் ஓட்டுக்காகவும் தங்களை அடமானம் வைக்கும் அரசியல் வியாபாரிகள். இவர்களிடம் மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாறுவார்களா மாட்டார்களா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக பி ஜே பி கூட்டணி ஆட்சி மலர வேண்டும்.