திராவிட மாடலுக்கு பதில் தமிழகம் மாடல் என சொன்னால் ஆறுதல்: சீமான் ஆவல்
தூத்துக்குடி: தமிழகம் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழகம் மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்க்கு அளித்த பேட்டி: கோவில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் அளவிலே உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் கருணாநிதி ஆட்சியின்போது தமிழில் நீதிமன்றங்களில் வழக்காட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியின் கையெழுத்திற்காக எனது இனமே காத்துக் கொண்டியிருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழகம் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழக மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும். அனைவரும் மாடலாக தான் இருக்கிறார்கள் தவிர ஆட்சி செய்யவில்லை.ராகுலின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்கு இல்லை.

கஞ்சா, குட்கா அபின் ஹெராயின் போன்றவை முருகன் மீது ஆணையாக போதை பொருள்கள் என ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் டாஸ்மாக் விற்கக்கூடிய மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா?. விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் ஹெச். ராஜா செய்து வருகிறார் அவருக்கு எனது நன்றி.
மேலும் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை என தெரிவித்த தமிழக அரசு. தற்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏன்? தற்போது நிதி நிலைமை வலிமை பெற்று விட்டதா?. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (21)
திருசென் டுர்க்கே எல்லாரும் போரர்களே ...என்ன காரணம் ....பழனிசாமி ஆட்சி நடக்கவா அல்லது அருள் புரியவா
தெலுங்கர்கள் எப்படி தமிழர்கள் என்று கூறி கொள்வார்கள்? வோட்டு கேட்கும்போது தமிழன். மற்ற நேரங்களில் திராவிடன்
ஓசி சோறு துலாபாரம், சைமன் துலாபாரம் எது சிறந்தது,
சைமன் மதம் மாற்றும் கும்பலா, இல்லை இந்துவா? ஒரே குழப்பமா இருக்கே. தமிழ்செல்வன்னு பெயர் வைத்துக்கொண்டு கர்த்தரே வாழ்கனு சொல்லுவானுங்க. அவர்களை கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதுபோல இந்த சைமனும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
உருப்படியா பேசுவான் .....