ADVERTISEMENT
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே, கீழப்பெரும்பள்ளம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் துர்கா ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் முதல்வரின் மகள், மருமகன், உறவினர்கள் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அருகே, கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில், இக்கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, புதிதாக கொடிமரம் விநாயகர், ராகு, கேது விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று(செப்.,05) கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும் முதல் யாகசாலை பூஜையும் துவங்கியது.

இதையடுத்து, இன்று துர்கா ஸ்டாலின் கொடியசைக்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட கடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்குள் தமிழக முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், நடிகர் சந்திரசேகர் மற்றும் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர் மெய்ய நாதன், எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் என பலரும் பக்தர்களுடன் கோவிலுக்கு வெளியில் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை கலெக்டர் லலிதா முன்னிலையில் எஸ்.பி நிஷா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து (12)
இதெல்லாம் ஒரு பொழப்பு.
enna பன்றது புருஷன் செய்யும் மஹா பாவங்களை பொண்டாட்டி கோயில் கோயிலாக சுற்றி பரிகாரம் தேடுகிறார்........
படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாளை ..நல்ல இருக்குது உங்க வேஷம் ...எல்லாம் எங்க தலை எழுத்து ..என்னைக்கு அந்த கடவுள் எல்லாம் உங்கள பிரட்டி எடுக்க போறாங்களோ...பாப்போம்...உங்க ஆட்டம் எத்துணை நாளுக்குனு ..
இந்து மக்களை இன்னுமா ஏமாற்ற நினைக்கீறீர்கள் . விழித்து கொண்டார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
no escapes from karma விடாது கர்மா