Load Image
Advertisement

தமிழகத்தில் டில்லி மாடல் பள்ளிகள் திட்டம்: துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்

 தமிழகத்தில் டில்லி மாடல் பள்ளிகள் திட்டம்: துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்
ADVERTISEMENT
சென்னை : தமிழக அரசு பள்ளிகளில், 'டில்லி மாடல் பள்ளிகள்' திட்டத்தை , சென்னையில் நடந்த விழாவில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார்.


புதுமைப் பெண் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலினும்; டில்லி மாடல் பள்ளிகள் திட்டத்தை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துவக்கி வைத்தனர்.


கடந்த ஆட்சியில், தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் 32 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்றப்பட்டன. இந்த பள்ளிகள், தற்போதைய தி.மு.க., ஆட்சியில், தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள் என, பெயர் மாற்றப்பட்டுள்ளன. டில்லியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளை பின்பற்றி, அந்த மாடலில், இந்த பள்ளிகளில் வகுப்புகளை நடத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள், இந்த பள்ளிகளில் பின்பற்றப்பட உள்ளன.இந்த திட்டத்தில், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் என, மொத்தம் 41 பள்ளிகள் 'டில்லி மாடல்' பள்ளிகளாக செயல்பட உள்ளன.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
சென்னை பாரதி மகளிர் கல்லுாரி வளாகத்தில், இன்று(செப்., 5) காலை நடந்த விழாவில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாடல் பள்ளி திட்டங்களை துவங்கி வைத்து பேசியதாவது: ஒவ்வொரு மாநிலமும், பிற மாநிலங்களில் உள்ள நல்ல திட்டங்களை எடுத்து கொள்ள வேண்டும். புதுமைப்பெண் திட்டம் பெண்களின் கல்விக்கு உதவுகிறது. பணக்காரர்கள் முதல் ஏழை வரை தரமான கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கொள்கை. தரமான கல்வியை அரசு பள்ளிகள் மூலம் நம்மால் கொடுக்க முடியும்.. நாட்டில் பள்ளி செல்லும் 27 கோடி மாணவர்களில் 18 கோடி பேர் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். நாடு முழுவதும் அரசு பள்ளிகளின் நிலைமை அனைவருக்கும் தெரியும். சிலவற்றை தவிர மற்றவை மோசமாக உள்ளது. நமது நாட்டை முதலிடத்திற்கு முன்னேற்ற கடுமையாக உழைத்து வருகிறோம்.

Latest Tamil News

நமது நாட்டை வளர்ந்த நாடாக்க நாம் முயற்சிக்கிறோம். 66 சதவீத பள்ளிகளில் மோசமான கல்வி கிடைத்தால், எப்படி வளர்ந்த நாடாக்க முடியும். அரசு பள்ளிகளில் தரமான கல்வியை கொடுக்க முடியாதவரை, வளர்ந்த நாடு என்ற கனவு நீண்ட தூரத்திலேயே இருக்கும். மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடியும். இந்தியாவிற்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் புதுமைப்பெண் திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, மகேஷ் மற்றும் துறை அலுவலர்களும், மாணவ - மாணவியரும் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (95)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    தீய சக்திகள் இணைந்தாலும் மோடி சக்தியை வெல்ல முடியாது.

  • bal - chennai,இந்தியா

    அட ரெண்டு இலவசமா பொறந்தது திட்டம் அறிவிக்கிறது..

  • bal - chennai,இந்தியா

    திராவிட சமூக நீதி மாடல் தோல்வி...டெல்லி எருமை மாடல் ஆரம்பம்..எவ்வள்வு கமிஷன் அதிகம் கிடைக்கும்...

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அந்த கெஜ்ரிவால் காந்தியவாதி அண்ணா ஹசாரேவை ஏமாற்றி ஆட்சியை பிடித்தான். நமது 'சகோதரர்', அதான் திருட்டு ரயில் பயணித்தவரின் வாரிசு, பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து ஆட்சியை பிடித்தவர். இரண்டு பேருக்கும் ஒத்துபோகாதா பின்ன...???

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    டில்லி மாடல் மது பாலிசியையும் அமல் படுத்த வேண்டியதுதானே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement