Load Image
Advertisement

கோ பேக் ராகுல் இயக்கம்; அர்ஜூன் சம்பத் அறிவிப்பு

Tamil News
ADVERTISEMENT


பழநி : ''ராகுல் கன்னியாகுமரியிலிருந்து துவங்கும் பாதயாத்திரையின் போது 'கோ பேக் ராகுல்' இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி நடத்தும்,''என, அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.


பழநியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:சீனா பரப்பிய கொரோனாவை பிரதமர் மோடி அரசால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் விரட்டியடித்தோம். எட்டு வழி சாலையை எதிர்க்கவில்லை என தி.மு.க., அமைச்சர் வேலு கூறுகிறார். மதுக்கடைகளை எதிர்த்தவர்களை தற்போது காணவில்லை.வாரிசு அரசியலை பா.ஜ., வின் அண்ணாமலை எழுச்சியுடன் அகற்றுவார்.

Latest Tamil News
தமிழகத்தில் மீண்டும் பழனிசாமி ஆட்சி வரவேண்டும். ராகுல் கன்னியாகுமரியிலிருந்து துவங்கும் பாதயாத்திரையின் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக 'கோ பேக் ராகுல்' இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி நடத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும்.



மோடியின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். தமிழகம் திராவிட பூமி அல்ல தேசிய பூமி என்பதை நிரூபிப்போம். 2024 ல் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்,என்றார்.


வாசகர் கருத்து (34)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    'கோ பேக் ராகுல்' இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி நடத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் - இப்படிக்கு ஹிந்து மக்கள் கட்சி. ஒரே கட்சி ஒரே ஒரு ஆளு ..

  • venugopal s -

    "தமிழகத்தில் மீண்டும் பழனிச்சாமி ஆட்சி வரவேண்டும்" என்கிறாரே இவர்,அப்ப தமிழகத்தில் பாஜகவின் ஆட்சியில் அண்ணாமலை முதல்வர் என்பது நடக்காது என்கிறாரா?

  • Karthikeyan - Trichy,இந்தியா

    .....

  • Karthikeyan - Trichy,இந்தியா

    ....உன்னோட போலி வேஷம் இனிமேல் எடுபடாது...

  • Karthikeyan - Trichy,இந்தியா

    .........

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement