ADVERTISEMENT
கோவை : ''ஹிந்து சமுதாயத்துக்கு எதிராக, எல்லா வகையிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஹிந்து தர்மத்தை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது நம் கடமை,'' என, கோவையில் பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார்.
ஹிந்து முன்னணி சார்பில், கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நேற்று நடந்த விநாயகர் சிலை விசர்ஜன பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது:சுதந்திரப் போராட்ட காலத்தில், தெய்வ பக்தி வாயிலாக, தேச பக்தி ஏற்படுத்தும் நோக்கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை, சுதந்திர போராட்ட தலைவர் திலகர் நடத்த துவங்கினார்.நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, 75 ஆண்டுகளாகி யுள்ள நிலையிலும், இவ்விழா நடத்துவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

ஹிந்து விரோதிகள், தமிழகத்தில் சுதந்திரமாக திரிகின்றனர்.தமிழகத்தில், 39 ஆண்டுகளுக்கு முன், விநாயகர் சதுர்த்தி விழாவை பொது விழாவாக, ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்த துவங்கினார்.ஹிந்து சமுதாயத்துக்கு இரண்டு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். வெளியில் இருந்து நடக்கும் மதமாற்றத்தாலும், உள்ளிருந்து எதிர்க்கும் ஹிந்து விரோதத்தாலும் அச்சுறுத்தல் இருக்கிறது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத ஹிந்து விரோதியை, அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, வீடு வீடாக சென்று வலியுறுத்த வேண்டும்.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்துச் சொல்லாமல், மற்ற மதங்களின் விழாவுக்கு வாழ்த்துச் சொல்பவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.
மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன; நாம் அசட்டையாக இருந்து விடக்கூடாது. ஹிந்து சமுதாயத்துக்கு எதிராக, எல்லா வகையிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (45)
இந்து மதத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.முதலாளிகளின் அடிவருடிகள் இதுபோல் கூப்பாடு போடுவது வயிற்றுப் பிழைப்புக்காக.
சார் தமிழன்னுக்குக ஏதாவது நல்லது சென்சுட்டு பேசுங்க சார்.. நீங்களும் ..உங்க பிஜேபி யும், RSSம்..
ஐயோ பாவம் சார் இவரு.. இன்னமும் இந்த ஊரு இவரை நம்புதுன்னு நினைக்கிறாரா சார் ?
ஆட்சி மாறினால் இந்து அறநிலையத்துறை காட்சியும் மாறுமே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இவர் மட்டும் பாஜகவிற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வீடு வீடாகப் போனார் என்றால் பாஜகவுக்கு கிடைக்கும் நாலு ஓட்டும் கிடைக்காது.இவர் முகராசி அப்படி!