மக்களை நேரில் சந்தியுங்கள்!- மந்திரிகளை விரட்டும் மோடி

லேக்சபா தேர்தலுக்கு முன்பாக, வரும் டிசம்பரில் குஜராத், ஹிமாச்சல் பிரதேசம்; 2023 துவக்கத்தில் கர்நாடகா, இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய, ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இந்த ஏழு மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தது, ஐந்து மாநிலங்களிலாவது வெற்றி பெறாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலு பெற்று விடும் என, பா.ஜ., தலைமை கருதுகிறது.
எனவே, ஏழு மாநில சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலை போலவே எதிர்கொள்ள வேண்டும் என, கட்சியினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய நிர்வாகிகளிடம் மோடி கூறியுள்ளதாவது:லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரும் சட்டசபை தேர்தல்கள் முக்கியமானவை. அதுவும் டிசம்பரில் நடக்கும் குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்கள், மிகமிக முக்கியமானவை. நாம் தான் வெல்வோம் என, அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது.
எப்போதும் மக்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும். மக்களிடம் நேரில் உரையாடி, அவர்களின் குறைகளையும், கள நிலவரத்தையும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அமைச்சர்கள், டில்லியிலேயே தங்கியிருக்காமல், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், அவரவர் மாநிலங்கள் அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, மக்களை நேரில் சந்திக்க வேண்டும். இது சம்பிரதாயமாகஇல்லாமல், உண்மையானதாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது, தேசிய நிர்வாகிகள், எம்.பி.,க்களும் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். மத்திய அமைச்சர்கள் தங்களுக்கென ஒரு லோக்சபா தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், கட்சியின் கிளை கமிட்டி நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று உணவருந்த வேண்டும். ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தையும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுக்கான தொகுதிகளை, பா.ஜ., தலைமை ஒதுக்கி வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் ரயில்களில் பயணித்தும், கிராமங்களுக்கு சென்றும் மக்களை சந்தித்து வருகிறார். மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத், கர்நாடகா; மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் குஜராத்திலும் வார இறுதி நாட்களில் பயணம் செய்து, மக்களை சந்தித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (63)
.....
மத்திய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கி கொள்கின்றனர்.மாநில அரசு ரூ.3.30 ஒரு கிலோவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ.30.70 காசுகள் மத்திய அரசு செலவு செய்கிறது -.மத்திய நிதி அமைச்சர்.=========மத்தியில் நிதி அமைச்சராக இருப்பவருக்கே மத்திய அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியின் உறுதியான விலை தெரியவில்லை. ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும் என்று உத்தேசமாகத் தான் கூறுகிறார். அவருக்கே உண்மை விலை தெரியாதபோது மாவட்ட ஆட்சியருக்கு அரிசியின் விலை தெரியவில்லை என்று வசை பாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஒரு கிலோவுக்கு மாநில அரசு ரூ.3.30 செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ.30.70 காசுகளை மத்திய அரசு ஏற்கிறது என்று அவர் கூறும் கணக்குப்படி பார்த்தால் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 35 வரவில்லை. ரூ. 34 தான் வருகிறது. இதுதான் ஒரு நிதி அமைச்சரின் கணக்கியல் அறிவா. இப்படிப்பட்ட அறிவாளிகளை அமைச்சராக பெறுவதற்கு இந்தியர்கள் என்ன தவம் செய்தனரோ
அரசு துறை அதிகாரிகள் மாநில அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ ஒரு சார்பாக செயல்படாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பது தான் தார்மீக நெறி.
பொருளாதார நிபுணர் அறிவாரா : LAW OF DIMINISHING MARGINAL UTILITY - ........AS CONSUMPTION INCREASES - MARGINAL UTILITY CAN DECLINE TO NEGATIVE UTILITY - அளவுக்கு அதிகமான விளம்பரம் வெறுப்பையே ஊட்டும் . திருப்பி திருப்பி செய்யப்படும் விளம்பரம் மக்கள் கவனத்தை ஈர்க்காது - உதாரணம் அனைவரும் அறிந்த T V விளம்பரங்கள்.- POSITIVE MARGINAL UTILITY சில காலம் மட்டுமே விரும்பப்படும் -ZERO MARGINAL UTILITY பெரிதாக கண்டு கொள்ளப்படாது NEGATIVE MARGINAL UTILITY சலிப்பு தட்டி வெறுப்பை ஏற்படுத்தும் - விளம்பரங்களுக்கும் பொருந்தும். பழக பழக பாலும் புளிக்கும் - சாதாரண மக்களுக்கு உணவே பிரதானம் படங்கள் அல்ல
ஆமா. எலக்சன் வருதுல்ல. ஓட்டு வேணுமே. எலக்சன் வந்தாதான் நமக்கு மக்கள் ஞாபகமே வரும்.