Load Image
Advertisement

நெல் விதைப்பு பணி துவக்கம்



ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழையால் விளை நிலங்களில் நெல் விதைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவுகிறது. இந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி செங்குடி, வரவணி, எட்டியதிடல், முத்துப்பட்டினம், வண்டல், சீனாங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் டிராக்டரில் மானாவாரியாக நேரடி நெல் விதைப்பை துவக்கியுள்ளனர்.விதைப்பு செய்யப்படும் வயல்களில் நிலவும் ஈரப்பதத்தால், ஒரு சில நாட்களில் நெற்பயிர்கள்முளைப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் வயல் வரப்புகளை சீரமைத்தல், வாய்க்கால் சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement