ADVERTISEMENT
சென்னை: அதிமுக அலுவலகம் தாக்குதல் வழக்குகள் சிபிஐடிக்கு மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது, ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் சண்முகம் செய்தியாளர் அளித்த பேட்டி: அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது, தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி, சீல் வைக்கப்பட்டிருந்த அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது ,அதிமுக அலுவலகம் முழுமையாக அடித்து நொறுக்கப்பட்டு, கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன. ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் பதிவு செய்யவில்லை, உள்துறை செயலரிடமும் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தோம். வழக்குகள் சிபிஐடிக்கு மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது, ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்,
வாசகர் கருத்து (2)
அது எப்படி எங்களின் அடிமை கைக்கூலியை விசாரிக்க முடியும்....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உடனடியாக நீதிமன்றத்தை அணுகி, திருடி சென்ற பொருட்களை மீட்க வழி தேட வேண்டும்.