Load Image
Advertisement

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை: முதல்வர் புகார்

 ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை: முதல்வர் புகார்
ADVERTISEMENT

கோவளம்: ஜிஎஸ்டி.,யை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


கேரளா மாநிலம் கோவளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30 வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகைக்கான காலத்தை மேலும் நீட்டிப்பதுடன், நிலுவைத்தொகையை மாநிலஙகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

Latest Tamil News
அதிவேக ரயில் போக்குவரத்து பாதையை ஏற்படுத்த வேண்டும். சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்குவதுடன், தமிழகம் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலஙகளுடன் இணைக்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதுடன், வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அனுமதி வழங்குவது அவசியம். மின்சார திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. மழை, வெள்ள பாதிப்புக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தென் மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் அனைவரும் இணைந்து,'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாதையில் செயல்படுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


வாசகர் கருத்து (84)

 • sankar - Nellai,இந்தியா

  கொண்டு வந்தது காங்கிரஸ் - கூட்டணியில் இருந்தது கட்டுமரக்கட்சி - இப்ப கசக்குதா - இவங்க எல்லாருக்கும் செலக்டிவ் அம்னீசியா

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  கீழ் கண்டபடி சட்டம் பிறப்பிக்க உச்ச நீதி மன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் மத்திய அரசிற்கு உத்தரவு இடவேண்டும்: 1. வாக்குறுதிகளை கொடுத்து. நிறைவேற்ற முடியாமல் போனால் அதை கொடுத்து ஆட்சிக்கு வந்த கட்சியை 5 வருடம். தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகளை கைது செய்து சிறையில் 5 வருடம் அடிக்கவேண்டும். இந்த சீர்திருத்தத்தை கொண்டுவந்தால் பொய் வாக்குறுதிகள் கொடிக்கமுடியாது ஒரு 50 சதவிகிதம் பேர் அரசியலில் இருந்து ஓடிப் போய்விடுவார்கள். இரண்டாவதாக தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அவர்களின் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆகியோரது சொத்துப் பத்திரங்களை அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பதவிக் காலம் முடிந்தவுடன் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மேலும் ஏதாவது சொத்துகள் வாங்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் உயர் நீதி மன்றம் அனுமதியுடன் தான் வாங்க வேண்டும். அப்படி வாங்கப் படும் சொத்துகளின் பாத்திரங்களும் அரசின் வசம் ஒப்படைக்கப் படவேண்டும். இந்த சீர்திருத்தம் வந்தால் மீதி 35 சதவிகிதம் பேர் காணாமல் போய்விடுவார்கள். இந்த கொள்கைகளை/ சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. திராவிடக் கழகத்தின் தன்னிகர் அற்ற தலைவராக இருந்த E V ராமசாமி நாயக்கர் அவர்களின் முரட்டு சீடராக இருந்த நடிக வேள் M R ராதா ஒரு படத்தில் கூறியது. Diravidian மாடல் 2.o என்று முழங்கும் தற்போதைய அரசு ஏன் பரீட்சார்த்தமாக தமிழ் நாட்டில் கொண்டுவரக் கூடாது. ஒரு வேளை M R ராதா அவர்கள் தெலுங்கர் ஆகவே அவர் டிராவிட சிந்தனையை ஏற்க மாட்டோம் என்பார்களோ?

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  GST வர்றதுக்கு முன்னால, விற்பனை வரி அது இதுன்னு நிறைய இருந்துச்சே, அதுல நிறைய பேர் சம்பாதிச்சிட்டு இருந்தார்களே, இப்போ அவங்கெல்லாம் பொழப்புக்கு என்ன செஞ்சுட்டு இருப்பாங்க? ஒருவேளை GST லேயும் எதாவது தில்லுமுல்லு பண்ணிட்டு இருக்காங்களோ? அதனாலதான், GST வருமானம் குறைவா வருதோ?

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  உங்கள் சாதனைகளை மீண்டும் மீண்டும் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள். தினமும் நான்கு கொலைகள் ஒரு கற்பழிப்பு தாலி அறுப்பு இவை எல்லாம் சட்டம் ஒழுங்கில் சேர்ப்பு இல்லையா. ஒரு பக்கம் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நீ கல்யாணம் கச்சேரி என்று சுற்றுகிற. ஸிழேந்திரபாபுவோ மிதிவண்டியில் மாமல்லபுரம் மகாலிங்கபுரம் என்று சுற்றுகிறார். ஆனால் குற்றங்கள் அது பாட்டிற்கு தொடருகிறது. நீயோ சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்கிறாய்.

 • madhavan rajan - trichy,இந்தியா

  திராவிட மொழி என்று ஒன்று கூறுகிறாரே. அது எது? அந்த மொழியில் உள்ள நூல்கள் யாவை? அதற்காக இவரது தந்தை என்ன செய்தார்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement