சென்னை : பதிவுத்துறை இணையதளத்தில், சொத்துக்களின் வில்லங்க சான்று விபரங்களை, பொதுமக்கள் இலவசமாக பார்க்கும் வசதி திடீரென முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சொத்து வாங்குபவர், விற்பவர், சொத்தின் முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்கச் சான்று பெற வேண்டும்.வில்லங்கச் சான்று விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் இலவசமாக அறியும் வசதியை, 2013ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பதிவுத்துறைக்கு வந்த புதிய அமைச்சர், செயலர், ஐ.ஜி., ஆகியோர் மக்களுக்கான சேவைகள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனால், ஐ.ஜி., அலுவலகத்தில் உள்ள சில உயரதிகாரிகள், வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் சேவையை, திட்டமிட்டு முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மோசடி விவகாரத்தில் சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கூடுதல் ஐ.ஜி.,யின் ஆதரவாளர்கள், தற்போதைய ஐ.ஜி.,க்கும், செயலருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த, 'சர்வர்' பிரச்னை எனக்கூறி, இலவசசேவையை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், புதிதாக சொத்து வாங்குவோர், அது தொடர்பான வில்லங்க விபரங்களை சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தலையிட்டு, மக்களுக்கான சேவையை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (18)
சில கோடி செலவில் பத்திர பதிவுத்துறை கணிணிமயம் ஆக்கப்பட்டு இருபதாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை ஒவ்வொறு மனுவுக்கும் கணிணி கட்டணம் என்று நூறு ரூபாய் வீதம் பல ஆயிரம் கோடிகள் வசூலாகிவிட்டது. எனவே அந்த பகல் கொள்ளையை எப்போது நிறுத்தப் போகிறார்கள்???
அப்புறம் அதிகாரிங்க புறங்கை நக்கி எப்படி திராவிடனுக்கு கப்பம் கட்டணுமே... இனிமேல் அலுவலகத்துக்கு போயி காசு கொடுத்து விண்ணப்பித்து அதிகாரி முதல் பியூன் வரை கையூட்டு கொடுத்து வாங்கி பாருங்க மக்கா. கேடுகெட்ட விடியல் தமிழகத்துக்கு இந்த திராவிட ஆச்சியில் என்று தமிழர்கள் சும்மாவா சொல்றாங்க....
மாநில அரசுகளின் கணினி சேவை அனைத்தும் ஒன்றிய அரசின் NIC செர்வர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. முந்தையதை விட இன்று வேகமாக செயல்படுவதை பார்க்கிறேன். புது (கிளவுட்) செர்வர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
பணம் கட்டி வாங்கும் EC மட்டும் சாதாரணமாக வந்துவிடுகிறது என நினைக்கிறீர்களா? பணம் செலுத்தியபின், அதன் விபரத்தை சம்பந்தப்பட்ட அலுவலக கிளார்க்கிடம் சொல்லி, சம்திங் கொடுத்தபின்தான் உங்கள் EC வரும். இல்லையென்றால் ஒருவாரம், பத்து நாள் ஆகும்.
என்ன யாராவது அறிவாலய மூலப்பத்திரத்துக்கு ஓசில வில்லங்க சான்று அப்ளை செஞ்சி நம்ம விடியா கும்பல டென்சன் ஆக்கிட்டாங்களோ?