தினமலர் நடத்தும் ஆசிரியர்களுக்கானமன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு
புதுச்சேரியில் இன்று நடக்கிறது
புதுச்சேரி-'தினமலர்' நாளிதழ் நடத்தும் மன அழுத்த மேலாண்மை குறித்த சிறப்பு கருத்தரங்கம் புதுச்சேரியில் இன்று நடக்கிறது.'தினமலர்' நாளிதழ், சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை யுடன் இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான 'மன அழுத்த மேலாண்மை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு' குறித்த சிறப்பு கருத்தரங்கம், புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிரீன் பேலஸ் ஓட்டலில் இன்று (3ம் தேதி) காலை 10:30 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.கருத்தரங்கை, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ருத்ர கவுடு குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். சிறப்பு அமர்வுகளில், சென்னை வாவ்-மைண்ட் பீகேவரல் கிளினிக் நிறுவனரும், கல்வியாளருமான டில்லிபாபு, சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை பொதுசுகாதார துறைத் தலைவர் அனிதா, முதுநிலை விரிவுரையாளர் சுகன்யா, புதுச்சேரி கல்வியாளர் புகழேந்தி ஆகியோர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் மன அழுத்த பிரச்னை களுக்கு தீர்வு தருகின்றனர்.கருத்தரங்கில் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என 300 பேர் பங்கேற்கின்றனர். சிறப்பு அமர்வினை தொடர்ந்து கலந்துரையாடல் நடக்கிறது.இதில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தீர்வுகளும் அலசப்பட உள்ளது. ஆசிரியர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு கல்வி யாளர்கள் டில்லிபாபு, புகழேந்தி ஆகியோர் விளக்கம் தருகின்றனர்.மதிப்பெண்களை தாண்டி, பள்ளி மாணவர்களை புரிந்து கொண்டு, அவர்களை வளர்த்தெடுக்க மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!