Load Image
dinamalar telegram
Advertisement

இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை : கைவிரித்த டி.சி.எஸ்..!

Tamil News
ADVERTISEMENT



'ஓராண்டு நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு இந்தாண்டு சம்பள உயர்வு இருக்காது' என முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாமென அச்சம் நீடிக்கும் நிலையில், அதற்கேற்ப பட்ஜெட் திட்டமிடலில், இந்திய ஐ.டி நிறுவனங்கள் தங்களது கொள்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அந்த வகையில், இன்ஃபோசிஸ் போன்ற சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 70 சதவீதம் மட்டும் சம்பளத்தை வழங்குவதாகவும், விப்ரோ தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதமாக வழங்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Latest Tamil News

இந்நிலையில், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் கூறியிருப்பதாவது:-

'முதலாமாண்டு நிறைவு செய்வோருக்கான டி.சி.எஸ் விதிகள் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஏப்.1ம் தேதி அல்லது அதற்கு பிறகு முதலாண்டு நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு ஓராண்டு பணி நிறைவு சான்றிதழோ அல்லது சம்பள உயர்வோ வழங்கப்படாது. முதல் சம்பள உயர்வு சுழற்சி, அடுத்த ஆண்டு (2023) முதல் இருக்கும்'

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டி.சி.எஸ்.,தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (3)

  • Tamilan - NA,இந்தியா

    எச் சி எல் லில் என்ன ஆயிற்று ? அனைவரும் திருடர்கள் .

  • அப்புசாமி -

    இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை. அடுத்த ஆண்டு வேலையே இல்லை. இவிங்க பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை வெச்சுதான் இயங்குது. அங்கே ஆர்டர் கட்டுன்னா இங்கே வேலை கட். ,

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ,,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement