ADVERTISEMENT
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு குறித்த தீர்ப்பு மூலம் தர்மம், நீதி வென்றுள்ளது என அக்கட்சி இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலா வரும் என்று சொல்வார்கள். அதிமுக தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.
இந்த பணிகளுக்கு தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒரு சில சுயநல விஷமிகள், தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

சட்டப்போராட்டத்தில் துணை நின்ற தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், சட்ட வல்லுநர்கள், அடிப்படை தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (22)
கேள்வி : உங்களுக்கு பிறகு அதிமுக என்னவாகும்?. எம்.ஜி.ஆர் பதில் அழிந்து போகும்.
இவர் இடைக்கால அல்லது தற்காலிக செயலாளராக இருக்கலாம் என்று தான் நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது.இடைக்காலம் என்பது எவ்வளவு நாளோ
மர்மம், நிதி வென்றுள்ளது....
தர்மமாம்.. நீதியாம்.. அப்படின்னா. இவர் தனி நீதிபதியை குற்றம் சொல்கிறார்.. நீதிமன்றத்தை அவமதிக்கிறார் என்று நீதி மன்ற அவமதிப்பு வழக்கு பழனிசாமி மீது தொடரலாமா ? சட்ட வல்லுனர்கள் கருத்து சொன்னால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இறுதியில் சூதே வெல்லும்.