ஆங்கிலம் படிக்க தெரிந்த மாணவர்கள் வெறும் 26%: மாநகராட்சி பள்ளிகளில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி

குறிப்பாக, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில், மாணவர்கள் அதிகம் பேர் தோல்வியடைந்து வருகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் ஆங்கில மொழி வாசிப்புத் திறன் எப்படி உள்ளது என, சமீபத்தில் மாநகராட்சி ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 26.1 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே, ஆங்கில மொழி பாடப் புத்தகங்களை சரளமாக படிக்கத் தெரிகிறது. மேலும், குறிப்பிட்ட மாணவர்களால் மட்டுமே ஆங்கிலம் பேசவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது.
மற்ற மாணவர்களால், ஆங்கில மொழி புத்தகங்களைப் பார்த்து கூட படிக்க முடியாத நிலை இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் ஆங்கில மொழி கல்வியை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தரமான உட்கட்டமைப்பு வசதிகள், நுாலகம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் பள்ளி மாணவர்களிடையே வருகைப்பதிவு குறைதல் அதிகரித்துள்ளது.
இதனால், தேர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. மேலும், ஆங்கில மொழி பாடத்தில் மாணவர்கள் படிக்கும் திறன் குறைவாக உள்ளது. இவற்றை சரிசெய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தன்னார்வலர்கள் வாயிலாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தலைமை ஆசிரியர்களுக்கு பரிந்துரை
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சென்னை மாநகராட்சி அளித்துள்ள பரிந்துரை:
l சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில், தினசரி வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும்
l மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 90 சதவீதம் வருகைப் பதிவை வைத்திருக்க வேண்டும். வருகைப் பதிவு குறைந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தான் பொறுப்பேற்க வேண்டும்
l வாரந்தோறும் நடைபெறும் தேர்வு அடிப்படையில், ஒவ்வொரு ஆசிரியரும் ஆண்டுக்கு 85 சதவீதம் மாதிரி தேர்வு நடத்தி, தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்
l பள்ளிகளின் உட்கட்டமைப்பு, தேவையான வசதிகள் குறித்து, மாநகராட்சியிடம் கேட்டுப் பெற வேண்டும்; ஆய்வுக் கூட்டத்திலும் தெரிவிக்கலாம்
l பள்ளி வாரியாக பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்துவதுடன், அதில் மாணவர்களின் விடைத்தாளைக் கொண்டு ஆராய வேண்டும். அவற்றை வீடியோ பதிவாக பதிவு செய்ய வேண்டும்
l பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
l ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள், பள்ளிகளில் உள்ள நுாலகங்களில் எடுத்த பாடப்புத்தகம் என்ற அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் நுாலகங்களை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'ஆப்சென்ட்!'
சென்னை மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடு குறித்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில், அலகு தேர்வில் பங்கேற்ற ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், 2,715 மாணவர்கள் தேர்வு எழுதாமல், விடுப்பு எடுத்தது தெரிந்தது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 7,428 பேர் ௧௦ம் வகுப்பு படிக்கின்றனர். அதில், பள்ளிகள் துவங்கி நடந்த முதல் அலகு தேர்வில், 6,719 மாணவர்கள் பங்கேற்றனர். 709 மாணவர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். இவர்களில் 63.28 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பிளஸ் 2 மாணவர்களில், 6,779 உள்ளனர். இவர்களில், 4,773 மாணவர்கள் முதல் அலகு தேர்வில் பங்கேற்று, 3,205 பேர் என, 60.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,006 மாணவர்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களை பொறுத்தவரையில், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடத் திட்டங்களுக்கான தேர்வும், முதல் அலகு தேர்வில் நடந்த அதே நாளில் வந்ததால், பெரும்பாலான மாணவர்கள், அத்தேர்வில் பங்கேற்றது தெரிந்தது. ஆனால், ௧௦ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது மற்றும் தேர்ச்சி விகிதம் குறைவாக பதிவான பள்ளிகள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வாசகர் கருத்து (71)
தமிழில் இதை விட பெரிய அளவில் ஒன்றும் இருக்காது. மாணவர்கள் மட்டுமே இப்படி இல்லை, ஆசிரியர்களும் இந்த இலட்சணம் தான். திராவிட கல்வி கொள்கை கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கல்வியை முற்றிலும் நாசமாக்கி விட்டார்கள். இதை நாம் புரிந்து கொண்டு இந்த திராவிட கட்சிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் நாடு மேலும் சிறப்பாகும்.
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இல்லை என்றால் இது வெறும் 2.6% அளவிலேயே இருந்திருக்கும்...
தமிழ் படிக்க சொல்லி இருந்தால் 26%ம்மே பரவால்லலையாக்கும்ன்னு தோனியிருக்கும்...
நாடாளுமன்றத்தில் இந்தி ஆட்சிமொழி மசோதாவில் பேசிய போது மூன்று மாதத்தில் இந்தி படிக்கலாம் என்றார்கள்.. மூன்று மாதத்திற்கு மேல் படிக்க இந்தியில் என்ன இருக்கு என்றார் பேரறிஞர் அண்ணா.. இந்தியில் இரண்டு இலக்கியங்கள் தான் இருக்கிறது ஒன்று துளசி ராமாயணம் எனச் சொல்லி இடைவெளி விட்டு மற்றொன்று ரயில்வே கைடு என்றார் நாடாளுமன்றமே அதிர்ந்தது எருக்கம் பூவை மல்லிகை என்றால் எப்படி ஏற்போம்.. .. மொழிக்கெதிராவனர்கள் அல்ல தமிழர்கள் ..ஆனால் செத்த மொழியை சிங்காரிக்க முடியாமல் இந்தியை துணைக்கழைத்த, இலக்கணமே இல்லாத மொழியை பிறமொழியின் இலக்கணத்தை (உருது ஹிப்ரு) தனக்காக்கிக்கொண்ட மொழியை பெரும் காப்பியங்களோ காலம்கடந்தும் நிலைத்துநிற்கும் புதினங்களோ இல்லாத மொழியை ஏன் கற்க வேண்டும்.. தொடர்ந்து இந்திய தேசிய மொழியென கூப்பாடு போட்டால் தென்னகம் ஒன்றியத்திலிருந்து வேறுபட்டே நிற்கும் .. கர்நாடகாவில் தெலுங்கானாவில் இந்தி எதிர்ப்பு மக்களிடையே வெகுவாக உணர்வை தூண்டியிருக்கிறது .. தமிழகம் தொடங்கிவைத்த "தீ" பற்றியெறிய தொடங்கியிருக்கிறது .. .. இந்தி திணிப்பால் மராட்டிய மொழியை மீட்டெடுக்க பெரும்பாடபடவேண்டியிருந்தது இப்போதும் அரசுமொழியாக இந்தியை தூக்கிபிடித்து வரவேண்டிய சூழல் .. மாராட்டிய நாடக கலை நலிந்துவிட்டது ..சினிமாவை சொல்லவே வேண்டாம்.. மாராட்டிய திரை கேட்பாரற்று போனது .. நிறைய மாநிலங்களில் அந்தந்த மக்கள் பேசிய நாட்டுமொழிகள் வழக்கொழிந்து போனது .. பன்முக இனம் வாழும் நாட்டில் பல்வேறு கலாச்சாரம் பண்பாடுகளின் குவியலாய் ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் முகம் இன்று சிதைக்கபடுகிறது அவரவருக்கு அவரவரின் மொழி பிரதானம் .. தாய்மொழியை இழந்து பிற மொழியை பற்றி நடந்தால் காலபோக்கில் முகமிழந்து போவோம் .. .. யாரையும் தமிழ் படிக்க கட்டாய படுத்தமாட்டோம் ..தேவைபடும் போது அவசியம்கருதி நாம் பழகிக்கொள்ளலாம் .. ஆனால் ஒரு மொழி ஒரு கலாச்சாரமென்ற பெயரில் வலுவிழந்த மொழியை திணிக்க முற்பட்டால் நாட்டு மக்கள் செவிட்டில் அறைந்தாற்போல் தான் பதிலளிப்பார்கள் ஹிந்தி_தெரியாது_போடா .. விற்கு பதில் அவசியமில்லை போடா என்று கூட சொல்லியிருக்கலாம் அது வீரியம் குறைந்து போயிருக்கும் தடவி கொடுத்ததுபோல இருந்திருக்கும் தெரியாது போடா என்பதில் தெரிந்துக்கொள்ளவே விரும்பவில்லை என்பதோடு எம்மொழி எனக்கு போதும்.. உலகாண்ட மொழி உலகாழும் மொழி போதுமென உரக்க சொல்வதைப்போல.. இந்தியாவை உரிமை கொண்டாட வேண்டுமெனில் அதற்கு தமிழர்களுக்கு மட்டுமே அருகதை உண்டு இந்த மண் அவர்களுக்கே உரியது .. என அம்பேக்தர் தொடங்கி ஜோதிபாசு வரை விபரம் தெரிந்தவர்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள் ஆனால் வந்தேறிகள் திராவிடமே இந்த மண்ணின் மூலம் என்பதை உடைக்க பல்வேறு சூழ்ச்சிகளை பல நூற்றாண்டு செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் .. தமிழை அழித்தொழிக்க எண்ணும்போதெல்லாம் மென்மேலும் பொலிவோடு திமிரி எழுகிறது .. .. மொழி திணிப்பை தன்னெழுச்சியாக இளைஞர்கள் (ஹிந்தி தெரியாது போடா) கையிலெடுத்திருக்கிறார்கள் .. ..
ஆங்கிலேயர்கள் நிறைய பேரை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்