Load Image
Advertisement

சம்பள உயர்வு எவ்வளவு? குழப்பத்தில் பஸ் ஊழியர்கள்

 சம்பள உயர்வு எவ்வளவு? குழப்பத்தில் பஸ் ஊழியர்கள்
ADVERTISEMENT
சென்னை : அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு குறித்த தகவல் அளிக்காததால் குழப்பத்தில் உள்ளனர்.


அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, கடந்த மாதம் முதல், 14வது ஊதிய ஒப்பந்த உயர்வு அமலானது.அதற்கான சம்பளம், நேற்று வழங்கப்பட்டது. இதில் 5 சதவீத உயர்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அத்துடன், அகவிலைப்படி உயர்வு, கொரோனா காலத்தில் பணியாற்றியற்கான சிறப்பூதியம் உள்ளிட்டவையும் வழங்கப்படும் என கூறப்பட்டது.


இந்நிலையில் நேற்றைய ஊதிய உயர்வில், 1,200 - 3,000 ரூபாய் மட்டுமே சம்பளம் கூடியுள்ளது. ஊதிய ரசீதில், சம்பள உயர்வுக்கான காரணங்கள் கூறப்படாததால் ஊழியர்கள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.
Latest Tamil News

இதுகுறித்து, ஓட்டுனர்கள் கூறியதாவது: கடந்த ஆட்சியில்8 சதவீத உயர்வுவழங்குவதாகவும் நான்கு ஆண்டு ஒப்பந்தம் போடுவதாகவும் அறிவித்தனர்.ஆனால், அதை ஏற்காமல் வேலைநிறுத்தம் செய்த தொழிற்சங்கத்தினர் 5 சதவீத உயர்வையும் நான்காண்டு ஒப்பந்தம் என்பதையும் ஏற்றுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டது தொழிலாளர்கள் தான்.


அதிருப்தி அடைந்த ஊழியர்கள் பலர்பணிக்கு வரவில்லை. இதனால் பஸ்களை 100 சதவீதம் இயக்க முடியாமல் போக்குவரத்துக் கழகங்கள் சிரமப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (7)

 • raja - Cotonou,பெனின்

  கோமாளித்தான் வர்றாண்டா...

 • duruvasar - indraprastham,இந்தியா

  வாக்குச்சாவடியில் யோசனை செய்து பட்டனை அமுக்கும். அமுக்கியாச்சில்ல அப்பறம் சவுண்டு உட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  தமிழக அரசின் கவனத்திற்கு - மதுரை திருமங்கலம் நகராட்சியின் பலவித தில்லுமுல்லு வேலைகள், கிழ்கண்ட பணிகளில் தமிழக அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் திருமங்கலம் நகராட்சியின் சவாதிகாரப்போக்கால் வருவாய் கிடைப்பதில்லை புதிய வீட்டிற்கு வீட்டுவரிப்போட போட ரூபாய் 10000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய வீட்டிற்கு தண்ணீர் சப்ளை பெற ரூபாய் 5000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய வீடுகட்ட பிளான் சாங்க்ஷன் செய்ய ரூபாய் 100000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய கடைகளுக்கு தொழில் வரி வாங்குவதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய கடைகளுக்கு உரிமம் வழங்க ரூபாய் 25000 லஞ்சம் கேட்கிறார்கள் மேற்கண்ட லஞ்ச வசூலினால் திருமங்கலம் ஏரியா மக்களெல்லோரும் நகராட்சியின் இந்த லஞ்ச பிரச்சனையால் யாரும் சொத்து வரிக்கு விண்ணப்பிக்காமல் ,தொழில் வரி மற்றும் உரிமம் பெறாமலும் உளார்கள். நகராட்சியின் இந்த கேடுகெட்ட லஞ்சம் வாகும் வேலைகளால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் வரவில்லை. நகராட்சியின் இந்த சர்வாதிகாரப்போக்கை கண்டு மக்கள் கொதிப்படைந்துளார்கள் . இது திருமங்கலம் நகராட்சியின் அவலம் தமிழ்நாட்டில் எதனை நகராட்சியில் இந்த மாதியான அவலம் தொடர்கிறது என்று கணக்கிட்டு பார்த்த பல கோடி பணம் வருவாயை நகராட்சி ஊழியர்கள் கெடுகிறார்களா அல்லது தமிழக அரசு கெடுகிறதா என்பது மக்களுக்கு புரியவில்லை

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //..ஊதிய உயர்வில், 1,200 - 3,000 ரூபாய் மட்டுமே கூடியுள்ளது. ஊதிய ரசீதில், உயர்வுக்கான காரணங்கள் கூறப்படாததால்....//....சம்பள ரசீதில் உயர்வுக்கான காரணங்கள் இல்லாமல் எப்படி கொடுக்க முடியும் ? ....இது என்ன நாடா இல்லை காடா? ..அரசாங்கமா நடக்குது ? .காட்டுமிராண்டிகள் ஆட்சி ...இதுக்கும் மத்திய அரசு காரணம் என்று எவனும் சொல்லலையா ? ....இது பற்றி போக்குவரத்துத்துறை அமைச்சர் , நிதி அமைச்சர் என்ன கூறுகிறார்கள் ? ....போக்குவரத்து துறையில் பென்ஷன் பணம் கூட பல ஆண்டுகளாக கொடுக்க முடியாத நிலைமை ..இப்படியே போனால் போக்குவரத்துத்துறை தனியார் மயமாகும் ..அதுக்குத்தான் அடி போடுவது ...

 • கந்தசாமி,மதகுபட்டி -

  செம்மறியாடு மாதிரி மொத்தமா திமுகவுக்கு ஓட்டு போட்டானுகள்ள இப்ப நல்லா அனுபவிக்கட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்