Load Image
Advertisement

இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு:: போர்ச்சுகல் அமைச்சர் ராஜினாமா

Tamil News
ADVERTISEMENT
லிஸ்பன்:போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார்.


ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ, அவசர கால மகப்பேறு சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டிருந்ததால், அந்தப் பெண் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Latest Tamil News


ஆம்புலன்ஸில் சென்றபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 722 கிராம் மட்டுமே எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த பெண் உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக, சுகாதார அமைச்சர் மார்டா மீது கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்ற அவர், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (8)

  • ஆரூர் ரங் -

    நம் நாட்டிலாவது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வசதிக் குறைபாடுகள் உண்டு. ஆனால்😏 வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் கூட இந்நிலைமை?

  • Dhandapani - Madurai,இந்தியா

    மருத்துவ சேவையில் இயலாமை, டாக்டர்கள் பற்றாக்குறை ஆகியவையே காரணம் என பல்வேறு தரப்பிலிருந்து அரசு மீது கண்டனமும், விமர்சனமும் எழுந்தன. இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார். இவரே சிறந்த அமைச்சர் சார், இந்தியாவில் எவ்வளவு கண்டனங்களை போராட்டங்களை நடத்தினாலும் போலீசை வைத்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துவிட்டு அமைச்சர் அடுத்த கூட்டத்துக்கு சென்றுவிடுவார்

  • பிரபு - மதுரை,இந்தியா

    இங்கேயெல்லாம் இப்படி பல மரணங்கள் நடக்குது. ஆனா யாருமே?

  • amuthan - kanyakumari,இந்தியா

    இப்படி விமர்சனங்களுக்கு ராஜினாமா செய்தால் இங்கு தினமும் தேர்தல் தான்

  • nadraj -

    if shes pregnant she shouldnt be travelling she should have been looked after her self and wel being

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்