மதுரையில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி கோலாகல ஆரம்பம்!
எது மாதிரியும் இல்லாத புது மாதிரி ஷாப்பிங் அனுபவம் தரும் நம்ம கண்காட்சியில் 250 'ஏசி' ஸ்டால்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டாலிலும் வெளிமாநிலம், வெளிநாட்டு பொருட்கள் குவிந்துள்ளன. நாள் முழுக்க விழாக்கோலமாக காட்சியளிக்கும் கண்காட்சிக்கு செப்., 5 வரை வருக... வருக... என அன்புடன் வரவேற்கிறோம்.

இளம் பெண்களுக்காக அழகியல் ஸ்டால்கள்
புதுமைகளை விரும்பும் இளம் பெண்களே... உங்கள் ஸ்டைலை, அழகை மெருகேற்ற நம்ம கண்காட்சியில் உங்களுக்காக ரெடிமேட் ஆடைகள், சாரீஸ், பேஷன் ஜூவல்லரி, அழகுசாதன பொருட்கள், காலணி, பேன்ஸி பேக், பர்ஸ், அழகுசாதனங்கள்என அழகியலை கொண்டாடி மகிழ பல ஸ்டால்கள் உள்ளன. அழகு கைகளில் அழகான மெகந்தியும் இலவசமாக வரையலாம்.
இவ்வளவு பொருட்களும் எனக்கே எனக்கா
ஒரே இடத்தில் இவ்வளவு பொருட்களா இது போதும் எனக்கு இது போதும் எனக்கு'னு சந்தோஷத்தில் துள்ளி ஷாப்பிங் செய்ய கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., 'டிவி', ஸ்மார்ட் போன், அக்சசரீஸ், அலங்கார விளக்குகள், ஸ்கிரீன், கிச்சன், எலக்ட்ரானிக் கேட்ஜட்ஸ் என நாளெல்லாம் திருநாளாக மாற்றி அமர்க்களமாய் ஷாப்பிங் செய்யலாம்.
கார், டூவீலர்கள், கட்டுமான பொருட்களுக்கு தனி ஸ்டால்கள் உண்டு. பரந்து விரிந்த பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
புட் கோர்ட்டில்காத்திருக்கும் விருந்து
கண்காட்சி ஸ்டால்களுக்குள் பிஸியாக ஷாப்பிங் செய்து பசியாக வெளியே வரும் உங்களுக்காக புட் கோர்ட்டில் விருந்து காத்திருக்கும். சுவையில் பின்னி பெடல் எடுக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா உருண்டை, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிஷ் பிரை, இடியாப்பம், பானிபூரி, கொழுக்கட்டை, பணியாரம், இட்லி, தோசை, பாப்கார்ன், ஸ்பைரல் சிப்ஸ், கேரளா பாயாசம் என ருசியான உணவுகளை அள்ளி சாப்பிடலாம்.
ஸ்டால்களில் கரகர மொறுமெறு சினாக்ஸ், ஹோம் மேட் சாக்லேட், கடலை மிட்டாய், தேன் மிட்டாய் என மறந்து போன பல கிராமத்து திண்பண்டங்களை வாங்கலாம். ஐஸ்கிரீம், குல்பி கூட குளுகுளுன்னு சாப்பிடலாம்.
குழந்தைகளுக்காக பொழுதுபோக்கு பூங்கா
'சும்மாவே விளையாடுவோம் விதவிதமாக, கலர்கலரா கேம்ஸ்கள் இருந்தால் எப்படி விடுவோம்' என உங்கள் குழந்தைகள் 'பஞ்ச்' டயலாக் பேசும் அளவிற்கு போத்தீஸ் கேம் ஸோனில் பேட்டரி கார், வாட்டர் போட், சிக்கு புக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, கலர் பலுான் சூட் என பொழுது போக்கு பூங்காவையே உருவாக்கி இருக்கோம். இது மட்டுமல்ல முழுக்க, முழுக்க இலவசமாக மேஜிக், ஜக்லிங் ஷோவை பார்க்கலாம்.
குழந்தைகளுக்குரிய நோட்டு, புத்தகங்கள், பொம்மைகளும் வாங்கலாம். குழந்தைகளை மகிழ்விக்க இரண்டு ஒட்டகங்கள் ரெடி. பலுான்களையும் இலவசமாக வாங்கி பறக்க விடலாம்.கண்காட்சியை இணைந்து வழங்குவோர்: அனிதா ஸ்டோர்ஸ், தேனி ஆனந்தம், அல்ட்ரா பெர்பெக்ட் மேட், நேஷனல் ஜூட் போர்டு, பானோசோனிக் முத்து, உட் ஸ்பா பர்னிச்சர்ஸ், இன்டீரியர்ஸ், கோவை லட்சுமி, கயல் அக்ரோ புட்ஸ்.
செப்., 1- 5
டிக்கெட் கொடுக்கும் நேரம்: காலை 11:00 மணி - இரவு 8:00 மணிகண்காட்சி நேரம்: காலை 11:00 மணி - இரவு 8:30 மணி
இடம்: மாநகராட்சி மைதானம் (எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட் அருகில்)மாட்டுத்தாவணி, மதுரை,
250 ஏ.சி., ஸ்டால்கள்
கட்டணம் ரூ.50 (6 வயதுக்கு மேல்) முககவசம் அணிந்து வரவும்.
வாசகர் கருத்து (3)
நம்ம தினமலர் நடத்தும் கண்காட்சிக்கு நம்ம ஆதரவு நிச்சயம் உண்டு.
namma dinamalar
காசு... பணம்... துட்டு... மணி... மணி....