Load Image
dinamalar telegram
Advertisement

கடலூர் அரசு கல்லூரியில் இன்று 3ம் கட்ட கவுன்சிலிங்



கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில் இன்று (1ம் தேதி) மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இந்த ஆண்டிற்கான ஒற்றைச் சாளர முறையிலான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 10ம் தேதி முதல் 20 வரையில் நடந்தது.


தொடர்ந்து, 23 முதல் 26ம் தேதி வரையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. மதிப்பெண் தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.முதல் மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படாமல் எஞ்சியுள்ள பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பு, அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கான அனைத்துப் பாடங்களுக்குமான பொதுவான மூன்றாம் கட்ட கலந்தாய்வு இன்று (1ம் தேதி) நடத்தப்படுகிறது.


இப்பிரிவுகளை சேர்ந்த அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் விண்ணப்பித்த மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். மூன்றாம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு விவரம் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சிலிங் வருபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்ததின் நகல் மற்றும் உரிய சான்றுகளை கொண்டுவர வேண்டும்.மேலும் விவரங்களுக்கு www.pacc.in என்ற இணைய தளத்திலோ அல்லது admission@pacc.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அறியலாம். இத்தகவலை கல்லுாரி முதல்வர் ஜோதி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement