ADVERTISEMENT
சேலம் : கிறிஸ்துவ ஜெப கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துவதாக, 'நர்சிங்' கல்லுாரி மீது மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த ஏழு மாணவியர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த மனு:சேலம் ஐந்து ரோட்டில் உள்ள கிதியோன் கல்லுாரியில், 'டிப்ளமா நர்சிங்' படிக்க சேர்ந்தோம். அங்கு சரிவர வகுப்பு நடத்துவதில்லை. மாறாக, ஞாயிறுதோறும் நடக்கும் ஜெபகூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர்.
தவறினால், 200 ரூபாய் அபராதம் செலுத்த நெருக்கடி தருகின்றனர். இதனால் அந்த கல்லுாரியில் படிக்க விருப்பமில்லை.சொந்த ஊரில் படிக்க முடிவு செய்துள்ளதால், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை பெற்று தர, மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லுாரி உதவி பேராசிரியை ஜெனிபர் கூறுகையில், ''ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெபகூட்டம், தியரி வகுப்பு நடக்கும். விருப்பப்பட்டால் ஜெப கூட்டத்தில் பங்கேற்கலாம். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை,'' என்றார்.
வாசகர் கருத்து (7)
கல்லூரி பெயர் போடுங்க சார். இதில் என்ன வெட்கம் வேண்டியிருக்கு
vantheri matha thirudargal eppadiyum maatri pesuvaargal ithu pazhakkam
கல்லூரிகளில் மதம் சார்ந்த ஜெபம் செய்வது , அதிக எல்லோரும் செய்ய வேண்டும் என்பது, மூட நமபிக்கை என்று வீரமணி சொல்வாரா, இல்லை திராவிட தலைவர்கள் ஒருவராவது சொல்வார்களா.
யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை . ஆனால் ஜெப கூட்டத்துக்கு வராவிட்டால் அபராதம் மற்றும் பரிட்சையில் எல்லாம் பண்ணுவோம் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இந்த பொழப்புக்கு.. ம்க்கும் இப்படியெல்லாம் மார்க்கெட்டிங் செஞ்சி கடவுளை புழைக்க வச்சிருக்க வேண்டிருக்கு.. ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே