சென்னை: பொய்யிலே பிறந்த புலவரை போல பொய்யிலே பிறந்தவர் பன்னீர்செல்வம். அவர் வசூல்ராஜா பன்னீர்செல்வம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பொய்யிலே பிறந்த புலவரை போல பொய்யிலே பிறந்தவர் பன்னீர்செல்வம். அவர் வசூல்ராஜா பன்னீர்செல்வம். அவர் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் போல, மக்களை நம்ப வைக்கிறார். ஆனால், அதனை நம்ப மக்கள் தயாராக இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில், பன்னீர்செல்வம் வகித்த துறையில் மட்டும் ஊழல் புகார் வந்தது ஏன்?
தொண்டர்கள், நிர்வாகிகள் செல்வாக்கு அவருக்கு கிடையாது. ஊடகங்கள் மற்றும் தி.மு.க.,வை நம்பி அரசியல் செய்கிறார். துரோகம் செய்ததில் பன்னீர்செல்வம் கைதேர்ந்தவர். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்பவர். கட்சியை காட்டிக் கொடுக்க தயங்காதவர்.
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
தொண்டர்கள் நிராகரிப்பு
அ.தி.மு.க.,வை சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கூறுகையில், பன்னீர்செல்வத்திடம் என்னென்ன உண்மைகள் இருக்கிறதோ அதை அவர் சொல்லட்டும். அவர் நடத்துவது நாடகம். அவரை தொண்டர்கள் நிராகரித்துவிட்டனர். நாடகத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பற்கு, அதனை துவக்கிய அவரே வைக்க வேண்டும். நிலைப்பாடு மாற்றம் என்ன என்பதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும். இவ்வாறு உதயக்குமார் கூறினார்.
வாசகர் கருத்து (9)
…..
இவர்கள் அப்படியே கர்ண மஹா பிரபுக்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஊழலில் அதிமுக எந்தக்கட்சிக்கும் சளைத்ததல்ல. உங்கள் சொத்துக்கள் எப்படி வந்தன என்ற விபரம் உங்களால் கூற இயலுமா?
வசூல்ராஜா, இது ஓ.பி.எஸ். அவர்களுக்கு மட்டும் பொருத்தம் இல்லை. அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். அரசியலில் 'குதிப்பதே' வசூல் செய்யத்தானே...
,,,,,
"தொண்டர்கள் செல்வாக்கு அவருக்கு (ஓ.பி.எஸ்-க்கு) கிடையாது" - அப்போ உங்களுக்கு (ஜெயக்குமார்) அதிகமா இருக்குதோ? அப்பா ஏன் உங்க தொகுதில நீங்க ஜெயிக்கல?