ADVERTISEMENT
விழுப்புரம்: தமிழில் மைனா, வேட்டை, தலைவா, தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடால்அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
தொடர்ந்து ஜெய்ப்பூரை சேர்ந்த பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை பவிந்தர்சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருவரும் திருமணம் முடித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் திருமணம் நடக்கவில்லை என்று அமலாபால் தரப்பில் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் அமலா பாலுக்கு பவிந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பண மோசடி செய்ததாகவும் அமலா பால் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், பவிந்தர் சிங்கை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (5)
பால் குடிக்க போகிறேன் என்று பஞ்சாபி மில் சொல்லி இருப்பார். அமலா பால் அதை தப்பாக அர்த்தம் பண்ணிவிட்டார். விசாரணை பண்ணாமல் கைது எப்படி?
ஒழுக்கமே மேன்மை தரும். நன்பன் இப்போ கெட்டவன்
உண்மையில் பாலியல் தொல்லை செய்த வழக்கில் அமலா பாலைத்தான் கைது செய்யவேண்டும். பஞ்சரான கேசெல்லாம் பாலியல் புகார் கொடுப்பது அநியாயம்...
என்னது, பாலியல் தொல்லை செய்துட்டு பணமோசடியும் செய்தாரா?..... வனவாசம் பகுதி 2 போல இருக்கே... இந்த மனுசனுக்கும் சிலை வைக்கணுமா...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பாலியல் பிரச்சினையை அமல் செய்யும் பிறவியே புகார் செய்கிறது. விற்ற பொருளையே குத்தம் சொல்லும் வியாபாரி