Load Image
Advertisement

திமுக அரசால் மயான பூமியாக மாறும் தமிழகம்: பழனிசாமி குற்றச்சாட்டு

Tamil News
ADVERTISEMENT


சென்னை: திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது என முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப் பொருள் பயன்பாடு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ரவுடிகளை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.
Latest Tamil News
திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை. சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம். அந்த இடத்தில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன், பே ட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெ ரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (34)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    திமுக., அதிமுக இரண்டும் ஒரே சாக்கடையில் ஸாரி குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கு தேவையற்றது.

  • Karthikeyan - Trichy,இந்தியா

    ,,,,,

  • Karthikeyan - Trichy,இந்தியா

    ,,,,,

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    கொலை கொள்ளை திருட்டு பாலியல் சுரண்டல்கள் எப்போதும் எங்கும் இருக்கும், அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அந்த குற்றங்களுக்கு துணை போகாமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் அறிந்து கொண்டு தி மு காவின் நேர்மையை உணர்ந்து வருகின்றார்கள்.

  • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

    தில்லு இருந்தால் திருட்டு மாடெலின் ஊழல்களை பட்டியல் போடுமையா. அப்போதுதான் நீர் உண்மையான எதிர்க்கட்சி தலைவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement